sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மழை பெய்யும் போது வாகன பயணியர் பின்பற்ற வேண்டியது என்னென்ன?

 மழை பெய்யும் போது வாகன பயணியர் பின்பற்ற வேண்டியது என்னென்ன?

 மழை பெய்யும் போது வாகன பயணியர் பின்பற்ற வேண்டியது என்னென்ன?


ADDED : மே 02, 2026 03:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 02, 2026 03:41 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரில் இரண்டு நாட்களுக்கு முன், ஆலங்கட்டி மழை பெய்து பெரும் அசம்பாவிதங்களை ஏற்படுத்தியது. வாகன பயணியர், சாலை நடுவில் சிக்கி திணறினர். இதையடுத்து, மழை பெய்யும் போது பின்பற்றும்படி போக்குவரத்து போலீசார், ஆலோசனைகள் வெளியிட்டுள்ளனர்.

பெங்களூரு போக்குவரத்து போலீசார், வெளியிட்ட அறிக்கை:

கன மழை பெய்யும் போது, நகரின் பல்வேறு சாலைகள் வெள்ளக்காடாக மாறுகின்றன. இப்பாதையில் செல்லும் வாகன பயணியர், நிதானமாக செல்வது நல்லது.

இதற்காக போக்குவரத்து போலீசார் கூறிய ஆலோசனைகளை பின் பற்றுங்கள். அதாவது:

 மழை நீர் தேங்கும் இடங்களில், எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்டுங்கள்

 கனமழை பெய்யும் போது, தேவையின்றி வெளியே செல்வதை தவிருங்கள்

 மழை பெய்யும் போது நனையாமல் இருக்க, மரத்தடியில் நிற்காதீர்கள்

 சுரங்கப்பாதையில் நிற்காதீர்கள். இங்கு நின்றால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும்

 செல்ல வேண்டிய இடத்தை பற்றி, தெளிவாக தீர்மானம் செய்து கொண்டு, அதன்பின் புறப்படுவது நல்லது

 மழை பெய்யும் போது, வாகனத்தை நிதானமாகவும், மற்ற வாகனங்களில் இருந்து இடைவெளி விட்டு ஓட்டுங்கள்.

 ஈரமான சாலைகளில் வாகனம் ஓட்டும் போது, திடீர் பிரேக் போடாதீர்கள்

 முடிந்த வரை நீர் தேங்கும் சாலைகளை தவிர்த்து, மாற்று சாலைகளை பயன்படுத்துங்கள்

 ஜங்ஷன்கள், சுரங்கப்பாதைகள், மேம்பாலங்களில் வாகனத்தில் செல்லும் போது, மிகுந்த கவனத்துடன் இருங்கள்

 பணியில் உள்ள போக்குவரத்து போலீசார் கூறும் போக்குவரத்து விதிகளை தவறாமல் பின்பற்றுங்கள்.

இவ்வாறு ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us