/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பள்ளி மாணவர்களுக்கு பஸ் பாஸ் எப்போது?
/
பள்ளி மாணவர்களுக்கு பஸ் பாஸ் எப்போது?
ADDED : மே 26, 2025 11:33 PM
பெங்களூரு : பி.எம்.டி.சி., அறிக்கை:
பள்ளிகள் திறப்பதால், மாணவர்களுக்கு இலவசமாகவும், சலுகை கட்டணத்திலும் பஸ் பாஸ் வழங்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி பஸ் பாஸ் வழங்க, பி.எம்.டி.சி., முடிவு செய்துள்ளது. நேற்று முதல் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
இலவசமாகவோ அல்லது சலுகை கட்டணத்திலோ, பஸ் பாஸ் பெற விரும்பும் மாணவர்கள், விண்ணப்பம் தாக்கல் செய்யலாம். சேவா சிந்து இணையதளத்தில், http//sevasindhu.karnataka.in விண்ணப்ப படிவங்கள் கிடைக்கும்.
பெங்களூரு - ஒன் மையங்கள் மூலமாகவும், மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூன் 1 முதல், மெஜஸ்டிக் பஸ் நிலையம், கெங்கேரி பஸ் டெர்மினல், ஹொஸ்கோட், எலக்ட்ரானிக் சிட்டி பஸ் நிலையம், சாந்தி நகர் பஸ் நிலையம், கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் ஆனேக்கல் பஸ் நிலையத்தில், பி.எம்.டி.சி., பஸ் பாஸ்கள் வழங்கப்படும்.
'சக்தி' திட்டத்தின் கீழ், மாணவியர் தங்களின் ஆதார் கார்டு காட்டி, பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.