sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

மக்கள் பிரதிநிதிகளை எங்கே தேடுவது? பல்லாரி வாக்காளர்கள் மனக்குமுறல்!

/

மக்கள் பிரதிநிதிகளை எங்கே தேடுவது? பல்லாரி வாக்காளர்கள் மனக்குமுறல்!

மக்கள் பிரதிநிதிகளை எங்கே தேடுவது? பல்லாரி வாக்காளர்கள் மனக்குமுறல்!

மக்கள் பிரதிநிதிகளை எங்கே தேடுவது? பல்லாரி வாக்காளர்கள் மனக்குமுறல்!


ADDED : மே 20, 2025 11:32 PM

Google News

ADDED : மே 20, 2025 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கர்நாடகாவில் இரண்டு ஆண்டு கால ஆட்சி நிறைவு பெற்றதை காங்கிரசார் நேற்று கொண்டாடினர். ஆனால், பல்லாரி மாவட்ட மக்களோ, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மீது அதிருப்தியில் உள்ளனர்.

பல்லாரி மாவட்டத்தில் ஐந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும், பல்லாரி எம்.பி.,யாக காங்கிரசின் துக்காராமும் உள்ளனர். 'கனிம மாவட்டம்' என்று பெயர் கொண்ட பல்லாரியில், மக்களுக்கு தேவையான குடிநீர், சாலை, மின் விளக்கு என எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை.

சர்க்கஸ்


மழைநீர் கால்வாயில் தேங்கிய கழிவுகளை அகற்றுவது பெரிய விஷயம் அல்ல.

ஆனால் இப்பணி செய்ததாக கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.

ஆனால் உள்ளூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் இது பற்றி 'மூச்சு' விடுவதே இல்லை.

பல்லாரி சாலையில் வாகனத்தில் செல்வது என்பது சர்க்கஸ் செய்வது போன்றதாகும். உடலில் சதை பிடிப்பு, சுளுக்கு சர்வ சாதாரணம். சாலை பள்ளங்களில் சிக்கி நடக்கும் விபத்தில் ஆண்டுதோறும் பலரும் உயிரிழக்கின்றனர். ஆனாலும் சாலையை மேம்படுத்த, யாருக்கும் மனது வரவில்லை.

பல்லாரி ரூரல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வான நாகேந்திரா, வால்மீகி முறைகேடு வழக்கில் சிக்கி, ஜாமினில் உள்ளார்.

தன் மீதான வழக்கால், பெரும்பாலான நாட்கள் பெங்களூரில் தான் தங்கி உள்ளார். பல்லாரிக்கு சென்றால், அமைச்சராக தான் செல்ல வேண்டும் என்ற பிடிவாதத்தில் உள்ளார்.

தொகுதியில் எந்த பணியும் நடக்கவில்லை. பிரச்னைகளை கூற முடியாமல் வாக்காளர்கள் பரிதவிக்கின்றனர்.

தவறான தேர்வு


'நெற்களஞ்சியம்' என்று அழைக்கப்படும் சிருகுப்பா சட்டசபை தொகுதியில் பல பிரச்னைகள் வரிசைகட்டி நிற்கின்றன. சிருகுப்பா டவுனை விட, கிராமப் பகுதி மக்கள் பாடாய் படுகின்றனர்.

இத்தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., நாகராஜாவின் செயல், மக்களை அதிருப்தி அடைய வைத்து உள்ளது. இவர், பெரும்பாலான நேரம் பெங்களூரு அல்லது வேறு இடங்களில் தான் உள்ளார்.

தொகுதி பக்கம் வருவதில்லை. இவரை தேர்ந்தெடுத்தது தவறோ என்று மக்கள் நினைக்கும் அவில் நிலவரம் உள்ளது.

சண்டூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருந்த துக்காராம், பல்லாரி எம்.பி.,யானார். காலியான இத்தொகுதிக்கு, அவரது மனைவி அன்னபூர்ணாவை களத்தில் இறக்கி, அவரையும் வெற்றி பெற வைத்துள்ளார். பலமுறை துக்காராம் எம்.எல்.ஏ.,வாக இருந்தாலும், சண்டூர் டவுன் மட்டுமே ஓரளவு வளர்ச்சி அடைந்து உள்ளது. கிராமப்புற பகுதிகள் பற்றி கேட்கவே வேண்டாம்.

கம்ப்ளி தொகுதியை கேட்பதற்கு ஆளில்லை. அடிப்படை வசதிகள் கூட இல்லாமல், மக்கள் அவதிப்படுகின்றனர். காங்., ஆட்சியில் இருந்தும், எங்கள் குறைகளை கேட்க மக்கள் பிரதிநிதிகளை எங்கே தேடுவது என்ற அதிருப்தி, வாக்காளர்களை கோபம் அடைய வைத்துள்ளது.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us