/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மத்திய அரசு நிதி குறித்து வெள்ளை அறிக்கை; முதல்வருக்கு நளின்குமார் கட்டீல் கோரிக்கை
/
மத்திய அரசு நிதி குறித்து வெள்ளை அறிக்கை; முதல்வருக்கு நளின்குமார் கட்டீல் கோரிக்கை
மத்திய அரசு நிதி குறித்து வெள்ளை அறிக்கை; முதல்வருக்கு நளின்குமார் கட்டீல் கோரிக்கை
மத்திய அரசு நிதி குறித்து வெள்ளை அறிக்கை; முதல்வருக்கு நளின்குமார் கட்டீல் கோரிக்கை
ADDED : பிப் 04, 2026 06:14 AM

''மத்திய அரசு, கர்நாடகாவுக்கு எவ்வளவு நிதி வழங்கியது என்பது குறித்து முதல்வர் சித்தராமையா வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்,'' என பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் நளின் குமார் கட்டீல் கூறி உள்ளார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:
கர்நாடகாவில் அரசு ஒப்பந்ததாரர்களுக்கு 37,370 கோடி ரூபாய் பில்கள் செலுத்தப்படாமல் உள்ளன. இதற்கு மாநில அரசின் நிர்வாக தோல்வியே காரணம். மத்திய அரசு காரணம் கிடையாது.
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நிதி இல்லாத சூழ்நிலை விரைவில் ஏற்படும். பல பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த சித்தராமையா, உத்தரவாத திட்டங்கள் அறிவிப்பதற்கு முன்பு மாநிலத்தின் வரவு, செலவை மதிப்பிட தவறிவிட்டார்.
காங்கிரஸ் அரசு அறிமுகப்படுத்திய ஐந்து உத்தரவாத திட்டங்களின் நிதி சுமையால் கர்நாடகா திவால் நிலையை நோக்கி செல்கிறது. ஆனாலும், சித்தராமையா தொடர்ந்து மத்திய அரசை குறை கூறி வருகிறார்.
மாநிலத்தின் வரி பகிர்வு குறித்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் விளக்கத்திற்கு அவர் ஏன் பதிலளிக்கவில்லை. கர்நாடகாவுக்கு மத்திய அரசு எவ்வளவு நிதி வழங்கி உள்ளது என்பது குறித்து முதல்வர் சித்தராமையா வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
ரயில்வே திட்டங்கள் மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சியில் நடப்பவை. மத்திய அரசின் தலைமையிலான திட்டங்களை அமல்படுத்த மாநில அரசு விரும்பவில்லை.
முதல்வர், துணை முதல்வருக்கு இடையே நடக்கும் அதிகாரப்பகிர்வு சண்டையால் கிராம பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல்கள் தாமதமாகி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

