தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஒயிட்பீல்டு - மாரிகுப்பம் ரயில் நேரம் மாற்றம்; தங்கவயல் தினப்பயணியர் கடும் அவதி

 ஒயிட்பீல்டு - மாரிகுப்பம் ரயில் நேரம் மாற்றம்; தங்கவயல் தினப்பயணியர் கடும் அவதி

 ஒயிட்பீல்டு - மாரிகுப்பம் ரயில் நேரம் மாற்றம்; தங்கவயல் தினப்பயணியர் கடும் அவதி


ADDED : ஜன 05, 2026 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2026 05:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தங்கவயல்: ஒயிட்பீல்டு - மாரிகுப்பம் மெமு ரயில் நேரம் ஒரு மணிநேரம் முன்னதாக புறப்படுவதால், தங்கவயல் தின பயணியர் பாதிப்பு அடைந்து உள்ளனர்.

'மெமு' ரயில் எண் 66532, கே.எஸ்.ஆர்., பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 2:40 மணிக்கு புறப்பட்டு மாலை 5:10 மணிக்கு மாரிகுப்பம் சென்றடையும்.

இந்த ரயிலில் பெங்களூரில் உள்ள எச்.ஏ.எல்., - பி.இ.எம்.எல்., - பி.இ.எல்., உட்பட பல நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள், ஆயத்த ஆடைகள், சிறு, நடுத்தர தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயணித்து வந்தனர்.

மாற்றம் இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, இந்த ரயில் ஒயிட் பீல்டு ரயில் நிலையத்தில் இருந்து, மாலை 3:50 மணிக்கு இயக்கப்பட்டது. இதனால் தினப் பயணியர் சிரமப்பட்டனர்.

இதற்கு முன்னதாக, கே.எஸ்.ஆர்., பெங்களூரில் மதியம் 3:00 மணிக்கு புறப்படும் 'பிருந்தாவன் சூப்பர் பாஸ்ட் ரயிலில்' பெங்களூரு கன்டோன்மென்ட், கிருஷ்ணராஜ புரம் ரயில் நிலையங்களில் ஏறும் பயணியர், பங்கார்பேட்டை ரயில் நிலையத்தில் மாலை 5:00 மணிக்கு இறங்கி, அரைமணி நேரம் காத்திருந்து, ஒயிட்பீல்டில் இருந்து மாரிகுப்பம் வரும் மெமு ரயிலில் ஏறி, தங்கவயலுக்கு வந்து கொண்டிருந்தனர்.

கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஒயிட்பீல்டு ரயில் நிலையத்தில் இருந்து மாலை 3:50 மணிக்கு புறப்பட்டு வந்த மெமு ரயில், ஒரு மணி நேரம் முன்னதாக, மதியம் 2:40 மணிக்கே புறப்படுகிறது. இதனால், பிருந்தாவன் ரயில், பங்கார்பேட்டைக்கு வரும் முன்னதாகவே, மெமு ரயில் மாரிகுப்பம் சென்று விடுகிறது.

பஸ் பயணம் இதனால், பிருந்தாவன் ரயிலில் வரும் மாரிகுப்பம் பயணியர், தங்கவயலுக்கு செல்ல ரயில் வசதி இல்லாமல், பஸ்சில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. போதிய பஸ் வசதி இல்லாமல், பயணியர் பல மணி நேரம் தவிக்கின்றனர்.

அதிலும் பஸ்கள், ராபர்ட்சன்பேட்டை வரை தான் செல்லும். அங்கிருந்து சாம்பியன், மாரிகுப்பத்துக்கு ஆட்டோக்கள் மூலம் தான் செல்ல வேண்டும்.

இந்நிலையில், அம்பேத்கர் ரயில் தின பயணியர் சங்க தலைவர் ஏ.முத்துமாணிக்கம் தலைமையில் பா.ஜ., பிரமுகர் ஆ.பாண்டியன், ம.ஜ.த., பிரமுகர் பாஸ்கரன் உட்பட பலர், கோலாரில் ம.ஜ.த., - எம்.பி., எம்.மல்லேஸ்பாபுவை சந்தித்து மனு கொடுத்தனர்.

இது தொடர்பாக, ரயில்வே அமைச்சர், தென் மேற்கு ரயில்வே பொது மேலாளர் ஆகியோருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us