தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஒயிட்பீல்டு ஸ்ரீ சரஸ்வதி கல்வி அறக்கட்டளை: பெரியவர்களுக்கு கன்னட வகுப்பு இன்று துவக்கம்

 ஒயிட்பீல்டு ஸ்ரீ சரஸ்வதி கல்வி அறக்கட்டளை: பெரியவர்களுக்கு கன்னட வகுப்பு இன்று துவக்கம்

 ஒயிட்பீல்டு ஸ்ரீ சரஸ்வதி கல்வி அறக்கட்டளை: பெரியவர்களுக்கு கன்னட வகுப்பு இன்று துவக்கம்


ADDED : ஜூன் 27, 2026 11:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 27, 2026 11:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ஒயிட்பீல்டு ஸ்ரீ சரஸ்வதி கல்வி அறக்கட்டளை சார்பில் தமிழர்கள் உட்பட கன்னடம் அல்லாத பிற மொழி படிக்கும் பெரியவர்களுக்கு இலவசமாக கன்னட வகுப்புகளுக்காக சேர்க்கை துவங்கி உள்ளது.

பெங்களூரு ஒயிட்பீல்டில் எஸ்.எஸ்., டியூஷன்ஸ் எனும், ஸ்ரீ சரஸ்வதி கல்வி அறக்கட்டளை செயல்படுகிறது. இந்த அறக்கட்டளை சார்பில், கடந்த, 17 ஆண்டுகளாக, தமிழர்கள் உட்பட கன்னடம் அல்லாத பிற மொழியில் படிக்கும் பெரியவர்களுக்கு இலவசமாக கன்னடம் பேச, படிக்க, எழுத கற்பிக்கப்படுகிறது.

இதுவரை 4,000க்கும் மேற்பட்டோர் கன்னட மொழியை கற்றுள்ளனர். பிற மொழி பேசுபவர்கள், கர்நாடகத்தின் மொழி, பண்பாடு, மக்களுடன் நெருக்கமாக இணைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.

இந்த வகுப்புகளுக்கு, கர்நாடக கன்னட வளர்ச்சி ஆணையத்தால் சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்களான டி.பி.டி.ஏ., எனும் திராவிட மொழி மொழிபெயர்ப்பாளர்கள் சங்க தலைவர் டாக்டர் சுஷ்மா சங்கர், பேராசிரியர் ராகேஷ், ரெபின் ரவீந்திரன் ஆகியோர் பயிற்சி வழங்குகின்றனர்.

இன்று காலை, 8:00 மணி முதல், 10:00 மணி வரை அறக்கட்டளை வளாகத்தில் அறிமுக வகுப்பும், பதிவு நிகழ்ச்சியும் நடக்கிறது. கன்னடம் கற்க விரும்புவோர், நேரடிாக பங்கேற்பது கட்டாயாமாகும்.

மேலும் விபரங்களுக்கும், பதிவு செய்யவும், 89010 41889, 81472 12724, 97428 53241 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us