பெங்களூரை சுற்றியுள்ள வனத்தை பூங்காவாக மாற்றுவோம்: முதல்வர்
பெங்களூரை சுற்றியுள்ள வனத்தை பூங்காவாக மாற்றுவோம்: முதல்வர்
ADDED : ஜூன் 27, 2026 11:11 PM

பெங்களூரு: ''பெங் களூரை சுற்றி உள்ள அனைத்து வனப்பகுதிகளும் பூங்காக்களாக மாற்றுவோம்,'' என, முதல்வர் சிவகுமா ர் கூறினார்.
பெங்களூரு விதான் சவுதா வளாகத்தில் உள்ள கெம்பே கவுடா உருவ சிலைக்கு, முதல்வர் சிவகுமார் நேற்று மாலை அணிவித்தார். பின், அவர் அளித்த பேட்டி:
பெங்களூரை சுற்றி உள்ள அனைத்து வன நிலங்களையும் பூங்காவாக மாற்றுவோம்; பசுமையை பாதுகாப்போம். கப்பன் பூங்காவை போன்று ஒரு பசுமை பகுதியை உருவாக்க, முடிவு செய்துள்ளோம். அதற்கான உத்தரவும் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ஒட்டுமொத்த உலகமும் பெங்களூரை பார்த்து கொண்டிருக்கிறது. கெம்பே கவுடாவின் கொள்கைகளும், உலகளாவிய மனித நேய தத்துவமும் பெங்களூரில் வளர்க்கப்பட்டு உள்ளன.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து, அதை பாதுகாக்க வேண்டும். பெங்களூரை பசுமையாக்கி, தோட்ட நகரமாக மாற்ற வேண்டும். இது வரை 15 லட்சம் மரக்கன்றுகள் வளர்த்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
