/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆர்.சி.பி., பாராட்டு விழாவுக்கு கவர்னரை அழைத்தது யார்?
/
ஆர்.சி.பி., பாராட்டு விழாவுக்கு கவர்னரை அழைத்தது யார்?
ஆர்.சி.பி., பாராட்டு விழாவுக்கு கவர்னரை அழைத்தது யார்?
ஆர்.சி.பி., பாராட்டு விழாவுக்கு கவர்னரை அழைத்தது யார்?
ADDED : ஜூன் 10, 2025 02:24 AM
''விதான் சவுதாவில் நடந்த ஆர்.சி.பி., அணி பாராட்டு விழாவிற்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை அழைத்தது யார் என்பது எனக்கு தெரியாது,'' என, துணை முதல்வர் சிவகுமார் காட்டமாக கூறினார்.
பெங்களூரு விதான் சவுதாவில் ஆர்.சி.பி., அணிக்கு நடந்த பாராட்டு விழாவில், கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டதால் கலந்து கொண்டதாகவும் கவர்னர் பங்கேற்பதால் தான் பங்கேற்க முடிவு செய்ததாகவும் முதல்வர் சித்தராமையா நேற்று முன்தினம் கூறி இருந்தார்.
இதுகுறித்து துணை முதல்வர் சிவகுமார் டில்லியில் நேற்று அளித்த பேட்டி:
விதான் சவுதா முன் நடந்த ஆர்.சி.பி., பாராட்டு நிகழ்ச்சிக்கு, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை அழைத்தது யார் என்பது எனக்கு தெரியாது. அதுபற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும்.
முதல்வரின் முன்னாள் அரசியல் செயலர் கோவிந்தராஜ், கவர்னரை அழைத்தாரா என்பது பற்றி, கவர்னர் தான் விளக்கம் அளிக்க வேண்டும். சின்னசாமி மைதானம் முன், கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் இறந்தது தொடர்பாக நீதி விசாரணை நடந்து வருகிறது. இதனால் அந்த வழக்கை பற்றி, நான் அதிகம் பேச முடியாது.
கூட்ட நெரிசலில் 11 பேர் இறந்ததை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. அவர்களுக்காக நான் வருந்துகிறேன். சின்னசாமி கிரிக்கெட் மைதானம் வேறு இடத்திற்கு மாற்றப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார். முதல்வராக அவர், சில சிறந்த முடிவுகளை எடுத்துள்ளார்.
வரும் 18ம் தேதி மீண்டும் டில்லிக்கு வந்து மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்
- -நமது நிருபர் -.