/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'யாருக்கு படிப்பறிவு இல்லை?' பிரியங்க் - ஹிமந்த பிஸ்வ சர்மா மோதல்
/
'யாருக்கு படிப்பறிவு இல்லை?' பிரியங்க் - ஹிமந்த பிஸ்வ சர்மா மோதல்
'யாருக்கு படிப்பறிவு இல்லை?' பிரியங்க் - ஹிமந்த பிஸ்வ சர்மா மோதல்
'யாருக்கு படிப்பறிவு இல்லை?' பிரியங்க் - ஹிமந்த பிஸ்வ சர்மா மோதல்
ADDED : அக் 28, 2025 11:31 PM

கர்நாடகாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியங்க் கார்கே, தன் வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசுவதால் சமீப காலமாக தேசிய அளவிலான செய்திகளில் இடம் பிடித்து வருகிறார்.
ஆர்.எஸ்.எஸ்., பற்றிய அவரது கருத்துகள் கடும் அதிர்வலைகளை கிளப்பின. அதுமட்டுமின்றி, அண்டை மாநிலமான ஆந்திராவுடன் முதலீட்டை ஈர்ப்பதில் சண்டையிட்டுவதாலும் அரசியல் வட்டாரத்தில் அவரை பற்றி பேசாதவர்கள் இல்லை எனலாம்.
'செமி கண்டக்டர்' தயாரிக்கும் நிறுவனங்கள், தங்கள் தொழிற்சாலைகளை பெங்களூரில் அமைக்கவே விரும்புவர். அப்படி இருக்கையில், மத்திய அரசு பா.ஜ., ஆளும் மாநிலங்களில் செமி கண்டக்டர் தொழிற்சாலைகளை நிறுவ அழுத்தம் கொடுக்கிறது.
இதன்பேரில், அசாம், குஜராத்தில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன என சமீபத்தில் பிரியங்க் கூறினார். இவரது பேச்சில் அசாம் இளைஞர்கள் அவமதிக்கப்பட்டு உள்ளதாக சர்ச்சை கிளம்பியது.
அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அவர் கூறுகையில், ''பிரியங்க் கார்கே ஒரு வடிகட்டிய முட்டாள். அசாம் இளைஞர்கள் குறித்து தவறாக பேசியுள்ளார்.
இதற்கு அசாம் காங்கிரஸ், எந்த கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. அசாமில் வசிப்பவர்களுக்கு படிப்பறிவு இல்லையென கூறுவது ஏன். இது தொடர்பாக நாங்கள் வழக்கு தொடர உள்ளோம்,'' என்றார் கொதிப்புடன்.
இதற்கு பதிலடியாக, பிரியங்க் கார்கே தன், 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாவது:
நான் கூறிய கருத்துகளை திரித்து பேசுவதையே பா.ஜ., தலைவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். சுகாதாரம், கல்வி துறைகளில் அசாம் கீழ்நிலையில் உள்ளது. அப்படி இருக்கையில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தனது சொத்துகளை பெருக்குவதிலே குறியாக இருக்கிறார்.
இவரது நிர்வாகமற்ற ஆட்சியால் அசாம் இளைஞர்கள் வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். இவரது ஆட்சியின் குறைகளை மூடி மறைக்கவே, மற்றவர்கள் குறித்து தவறான கருத்துகளை பேசி வருகிறார்.
இவ்வாறு அவர்கூறியுள்ளார்.
- நமது நிருபர் -:

