/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எஸ்.ஐ.டி., அமைக்க உத்தரவிட்ட டில்லி தலைவர் யார்? முதல்வருக்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா கேள்வி

ADDED : ஆக 26, 2025 03:09 AM

பெங்களூரு: ''டில்லி தலைவர்கள் கூறியவுடன், சிறப்பு விசாரணைக்கு குழு அமைத்துள்ளீர்கள். அந்த டில்லி தலைவர் யார்,'' என பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா கேள்வி எழுப்பி உள்ளார்.
பெங்களூரு ஜெயநகர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., ராமமூர்த்தி தலைமையில், தர்மஸ்தலாவுக்கு 'தர்மத்தை காக்க மதப் போர்' பிரசாரத்தை, பெங்களூரு நைஸ் சாலையில், பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா கொடி அசைத்து நேற்று துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
த ர்மஸ்தலா விவகாரத்தில் சதி நடந்து உள்ளது. இவ்வழக்கை சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். யு - டியூப் வீடியோக்கள் உருவாக்கியவர்களுக்கு ஆதரவாக வாதாட, 10 வக்கீல்கள் வருகின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும், ஐந்து முதல் 10 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பவர்கள். இவ்வளவு வக்கீல்கள் வருவதற்கும், அவர்களை ஆதரித்தவரும் முதல்வர் தான்.
சிறப்பு விசாரணை குழு மூலம் உண்மையை கொண்டுவர நினைக்கும் அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. சனாதன தர்மத்தை ஒழிப்பதே அரசின் செயல்திட்டம்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை, கொசு, காலராவுடன் ஒப்பிட்டு பேசினார். அதே செயல் திட்டத்தை மாநில அரசும் பின்பற்றுகிறது.
முகமூடி அணிந்த நபரின் பின்னணி தெரியாமலேயே, எஸ்.ஐ.டி., அமைக்கப்பட்டு உள்ள து. மூத்த போலீசார், எஸ்.ஐ.டி., குழு அமைக்க வேண்டாம் என்று கூறியும், அதை நிராகரித்த முதல்வர், அவசர அவசரமாக குழுவை அமைத்தது ஏன். யாருடைய அழுத்தத்தின் கீழ் இதை அமைத்தார்.
டில்லி தலைவர்கள் கூறியவுடன், சிறப்பு விசாரணைக்கு குழு அமைத்துள்ளீர்கள். அந்த டில்லி தலைவர் யார். இதற்கு அவர் பதிலளித்தாக வேண்டும்.
இதுவே ஹிந்து மதமாக இல்லாமல், வேறு மதமாக இருந்திருந்தால், முதல்வர் இந்த விசாரணை குழுவை அமைத்திருப்பாரா.
இவ்வாறு அவர் பேசினார்.