/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தீபாவளி பட்டாசு சீட்டு நடத்தியவர் ஓட்டம்?
/
தீபாவளி பட்டாசு சீட்டு நடத்தியவர் ஓட்டம்?
ADDED : அக் 18, 2025 04:48 AM
பங்கார்பேட்டை: பங்கார்பேட்டையில் தீபாவளி பட்டாசு சீட்டு நடத்தி வந்தவர், பல லட்ச ரூபாய் வரை வசூலித்து தலைமறைவாகிவிட்டார்.
பங்கார்பேட்டை அமராவதி லே - அவுட்டில் கட்டட தொழிலாளர் நலச் சங்கத்தை நடத்தி வந்தவர் பி.பாரத், 40. இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு, 25 கிலோ பிரியாணி அரி சி, புழுங்கல் அரிசி 25 கிலோ, 15 கிலோ சமையல் எண்ணெய், மட்டன், சிக்கன் உட்பட பல உணவுப் பொருட்கள் வழங்குவதாக சீட்டு நடத்தினா ர்.
பெங்களூரு, சிக்கபல்லாப்பூர், கோலார் மாவட்டத்தின் கோலார், மாலுார், பங்கார்பேட்டை, தங்கவயல், சீனிவாசப்பூர், முல்பாகல் மற்றும் ஆந்திரா, தமிழக மாநிலங்களிலும் சேர்த்து பல ஆயிரம் பேரை இந்த சீட்டுத் திட்டத்தில் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இம்மாதம் 15ம் தேதி அறிவித்தப்படி பட்டாசு, உணவுப் பொருட்களை வழங்கி இருக்க வேண்டும். ஆனால், 16ம் தேதி இரவோடு இரவாக குடும்பத்தோடு பாரத் தலைமறைவாகிவிட்டார்.
சீட்டு நடத்திய பாரத் வீட்டை தேடி வந்த பலரும் பங்கார்பேட்டை போலீசில் புகார் செய்துள்ளனர்.