தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காங்கிரசுக்கு ஆதரவாக ஓட்டு போட்டது யார்? உண்மை கண்டறியும் குழு அமைத்தது பா.ஜ.,

 காங்கிரசுக்கு ஆதரவாக ஓட்டு போட்டது யார்? உண்மை கண்டறியும் குழு அமைத்தது பா.ஜ.,

 காங்கிரசுக்கு ஆதரவாக ஓட்டு போட்டது யார்? உண்மை கண்டறியும் குழு அமைத்தது பா.ஜ.,


ADDED : ஜூன் 20, 2026 03:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2026 03:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடக எம்.எல்.சி., தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக ஓட்டு போட்டவர்கள் யார் என்பதை அறிய, உண்மை கண்டறியும் குழுவை பா.ஜ., அமைத்துள்ளது. அலட்சியமாக இருந்ததாக எதிர்க்கட்சி தலைவர் அசோக், பா.ஜ., தலைவர் விஜயேந்திராவை, மேலிட தலைவர்கள் திட்டி தீர்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் டில்லி வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மேல்சபைக்கு ஏழு எம்.எல்.சி.,க்களை தேர்வு செய்ய நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. காங்கிரஸ் ஐந்து; பா.ஜ., இரண்டு இடங்களிலும் வென்றது. ம.ஜ.த., வேட்பாளர் கோவிந்தராஜ் தோல்வி அடைந்தார்.

பா.ஜ., மற்றும் ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள், குறுக்கு ஓட்டு போட்டதால் தான், காங்கிரசின் ஐந்தாவது வேட்பாளர் வெற்றி பெற முடிந்தது. எம்.எல்.ஏ.,க்கள் குறுக்கு ஓட்டு போட்டது, பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி கட்சி தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

டில்லி வர அழைப்பு குறுக்கு ஓட்டு போடப்பட்டது பற்றி பா.ஜ., மேலிட தலைவர்களுக்கு, எதிர்க்கட்சி தலைவர் அசோக், பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தகவல் கொடுத்தனர். இதை கேட்டு கடும் கோபம் அடைந்த மேலிட தலைவர்கள், அலட்சியமாக இருந்ததாக அசோக், விஜயேந்திராவை திட்டி தீர்த்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இருவரையும் டில்லி வரும்படியும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் ஓரிரு நாட்களில் டில்லி செல்ல உள்ளனர்.

இதற்கிடையே, பா.ஜ.,வில் குறுக்கு ஓட்டு போட்டது யார் என்பதை கண்டறிய, எம்.எல்.சி., ரவி தலைமையில் உண்மை கண்டறியும் குழுவை, விஜயேந்திரா அமைத்துள்ளார். இந்த குழுவில,் எம்.எல்.ஏ., மகேஷ் தெங்கினகாயி, முன்னாள் அமைச்சர் மகேஷ் இடம்பிடித்து உள் ளனர். வரும் 25ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும், விஜயேந்திரா கேட்டு உள்ளார்.

இந்நிலையில் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் பைரதி பசவராஜ், சந்துரு லமானி, கிருஷ்ணா நாயக் உட்பட, ஆறு பேர் குறுக்கு ஓட்டு போட்டதாக, ஊடகங்க ளில் செய்தி வெளியானது.

அதிர்ச்சி அடைந்த பைரதி பசவராஜ், சந்துரு லமானி, கிருஷ்ணா நாயக் ஆகியோர், அசோக், விஜயேந்திராவை சந்தித்தனர். தாங்கள் குறுக்கு ஓட்டு போடவில்லை என்றும் விளக்கம் அளித்தனர்.

அரசியல் சாணக்கியர் பின், விஜயேந்திரா அளித்த பேட்டி:

எங்கள் கட்சியில் உள்ள, 'மிர் சாதிக்' குறித்து, கட்சி தலைமைக்கு தகவல் கொடுப்பேன். அவர்கள் மீது நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும். மேலிட தலைவர்களை சந்தித்து பேசுவேன். கட்சிக்கு துரோகம் செய்வது தாய்க்கு துரோகம் செய்வதற்கு சமம். கட்சியில் குழப்பம் நிலவுகிறது. தொண்டர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

குமாரசாமி 10 நாட்களுக்கு முன் என்னிடம் பேசினார். நாங்கள் இருவரும் ஆலோசித்து, ம.ஜ.த., வேட்பாளரை களம் இறக்க முடிவு செய்தோம்.

முதல்வர் சிவகுமார் அரசியல் சாணக்கியர் இல்லை. பல சாணக்கியர்களை நாங்கள் பார்த்து விட்டோம். குதிரை ஓடி கொண்டே இருக்கும். அது தடுமாறி விழும் போது விழட்டும். நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். நான் எடியூரப்பாவின் மகன். எதையும் தாங்கும் சக்தி உள்ளது. இப்போது நடந்தது துர திர்ஷ்டவசமானது. குமாரசாமி வருத்தம், வேதனை அடைந்துள்ளார். அவரிடம் பேசுவேன்.

இவ்வாறு அவர் கூறினார் .

''காங்கிரசை போல எம்.எல்.ஏ.,க்களை நாங்கள் ரிசார்டில் அடைத்து வைக்கவில்லை. எம்.எல்.ஏ.,க்கள் முழுமையாக நம்பினோம். ஆனாலும், சிலர் துரோகம் செய்து விட்டனர்,'' என, அசோக் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இது எனக்கு பாடம்! மத்திய அமைச்சர் குமாரசாமி கூறுகையில், ''ஜி.டி.தேவகவுடாவை தவிர, 17 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டும் எங்கள் வேட்பாளருக்கு விழும் என நினைத்தேன். ஆனால் அப்படி நடக்கவில்லை. ''இந்த தேர்தல் எனக்கு மற்றொரு அனுபவத்தை கொடுத்துள்ளது. இனி யாரையும் அளவுக்கு அதிகமாக நம்ப மாட்டேன். இது, எனக்கு பாடம். குறுக்கு ஓட்டு போட்டது யார் என்று என்னிடம் தகவல் உள்ளது,'' என்றார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us