தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தங்கவயல் போலீசாருக்கு சம்பளம் தாமதம் ஏன்?

 தங்கவயல் போலீசாருக்கு சம்பளம் தாமதம் ஏன்?

 தங்கவயல் போலீசாருக்கு சம்பளம் தாமதம் ஏன்?


ADDED : மார் 08, 2026 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 05:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தங்கவயல்: மாநிலம் முழுதும் உள்ள போலீஸ் துறையினர், இம்மாதத்திற்கான சம்பளத்தை பெற்றிருந்தாலும், தங்கவயல் போலீஸ் மாவட்ட ஊழியர்களுக்கு நேற்று மாலை வரை சம்பளம் வழங்கப்படவில்லை.

கர்நாடக மாநில போலீசாருக்கு மாதந்தோறும் முதல் நாளே சம்பளம் பட்டுவாடா செய்யப்படுவது வழக்கம். இந்த மாதத்தில், தங்கவயல் போலீஸ் மாவட்டத்தில் உள்ள, 750 போலீசாருக்கு இன்னும் சம்பளம் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'தங்கவயல் மாவட்ட போலீஸ் நிர்வாக அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள், அரசிடம் மானிய தொகையை கேட்க, வழக்கம் போல கோரிக்கை விபரத்தை அரசுக்கு சமர்பித்து இருக்க வேண்டும். போலீஸ் துறையில் மானியத்தை சரிபார்த்த பிறகு தான் அடிப்படை ஊதியம், மருத்துவ படி, வீட்டு வாடகை படி போன்றவற்றை பட்டியலிட வேண்டும். வழக்கம் போல மானியத்தை பெற கவனிக்க வேண்டிய பணிகளை போலீஸ் நிர்வாகம் செய்ய தவறியதால், சம்பளத்துக்கான மானியம் கிடைக்கவில்லை' என்றனர்.

பெயர் சொல்ல விரும்பாத ஒரு போலீஸ்காரர் கூறுகையில், 'மாதத்தின் முதல் வாரத்தில் பள்ளி கட்டணம், மளிகை பொருட்கள், இ.எம்.ஐ., என, பல பிரச்னைகள் உள்ளன. இதையெல்லாம் மாத சம்பளம் வாங்கித்தான் சரி கட்ட வேண்டும்.

ஒருவாரம் கடந்தும் இன்னும் சம்பளம் கிடைக்காததால், மிக கஷ்டமாக இருக்கிறது. கடன் தவணை செலுத்துமாறு தகவல்கள் வந்து கொண்டுள்ளன. ஒரு வாரம் கடந்தும் கூட சம்பளம் கிடைக்காததால், போலீஸ் குடும்பத்தினர் நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறோம்' என்றார்.

கருவூலத்துறை அதிகாரி கூறுகையில், 'போலீசாருக்கு சம்பளம் பட்டுவாடா செய்யும் கருவூல துறைக்கும், தாமதம் ஆவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கோரிக்கை வைக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள் சம்பளம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. போலீஸ் துறைக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கப்படுகிறது' என்றார்.

இனியாவது, தங்கவயல் போலீசாருக்கு மாதத்தின் முதல் நாளே சம்பளம் கிடைக்க வழக்கமான பணிகளை மேற்கொள்ள உயர் அதிகாரிகள் தான் கண்காணிக்க வேண்டும் என்பது போலீசாரின் விருப்பமாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us