/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஓட்டு சீட்டுக்கு பயம் ஏன்? தினேஷ் குண்டுராவ் கேள்வி
/
ஓட்டு சீட்டுக்கு பயம் ஏன்? தினேஷ் குண்டுராவ் கேள்வி
ஓட்டு சீட்டுக்கு பயம் ஏன்? தினேஷ் குண்டுராவ் கேள்வி
ஓட்டு சீட்டுக்கு பயம் ஏன்? தினேஷ் குண்டுராவ் கேள்வி
ADDED : செப் 07, 2025 02:23 AM

பெங்களூரு: 'ஓட்டுச்சீட்டில் தேர்தல் நடந்தால், முறைகேடுகளை கட்டுப்படுத்தலாம்' என, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
இதுகுறித்து, 'எக்ஸ்' வலைதளத்தில் நேற்று அவர் வெளியிட்ட பதிவு:
உள்ளாட்சித் தேர்தல்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்துக்கு பதிலாக, ஓட்டுச் சீட்டு பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் பா.ஜ., தலைவர்கள் வெலவெலத்துள்ளனர். ஓட்டுச்சீட்டு மூலம் தேர்தல் நடந்தால், முறைகேட்டுக்கு வழியிருக்காது என்பது, அக்கட்சியினரின் கலக்கத்துக்கு காரணமா?
பெரும்பாலான வளர்ந்த நாடுகளில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்துக்கு பதிலாக, ஓட்டுச் சீட்டு மூலம் தேர்தல் நடத்தப்படுகிறது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், முறைகேடு நடப்பதே இதற்கு காரணம்.
சமீபத்தில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், ஓட்டுப்பதிவு முறைகேட்டை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பின், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் மத்திய தேர்தல் கமிஷன் மீது, மக்களுக்கு நம்பிக்கை குறைந்துள்ளது.
ஓட்டுச் சீட்டு பயன்படுத்தி, தேர்தல் நடத்தும் எங்கள் அரசின் முடிவுக்கு, மாநில தேர்தல் கமிஷனும் அனுமதி அளித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல், முறைகேடின்றி நியாயமான முறையில் நடக்க வேண்டும் என்பது, எங்கள் அரசின் நோக்கமாகும். நேர்மையான முறையில் தேர்தலை எதிர்கொள்ள, பா.ஜ.,வினருக்கு பயம் ஏன்?
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.