/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இலவச திட்டங்களை அறிவிப்பது ஏன்? பா.ஜ.,வுக்கு காங்கிரஸ் கேள்வி
/
இலவச திட்டங்களை அறிவிப்பது ஏன்? பா.ஜ.,வுக்கு காங்கிரஸ் கேள்வி
இலவச திட்டங்களை அறிவிப்பது ஏன்? பா.ஜ.,வுக்கு காங்கிரஸ் கேள்வி
இலவச திட்டங்களை அறிவிப்பது ஏன்? பா.ஜ.,வுக்கு காங்கிரஸ் கேள்வி
ADDED : ஜூலை 18, 2025 11:25 PM

பெங்களூரு: ''பிரதமர் நரேந்திர மோடியின் இமேஜ் குறைகிறது. எனவே பா.ஜ.,வினர் இலவச திட்டங்களை அறிவிக்கின்றனர்,'' என, வாக்குறுதித் திட்டங்களை செயல்படுத்தும் கமிட்டி தலைவர் ரேவண்ணா குற்றஞ்சாட்டினார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் அரசு வந்தபோது, மக்களுக்கு தேவையான பல நலத்திட்டங்களை செயல்படுத்தியது.
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசின் முதல்வர்கள் இருந்தபோது நல்ல திட்டங்களை செயல்படுத்தினர். பிரதமர் நரேந்திர மோடி, ஆண்டுதோறும் இரண்டு கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்குவதாக உறுதி அளித்தார். ஆனால் இன்னும் உருவாக்கவில்லை.
காங்கிரஸ் அரசு அமைந்து, முதல் அமைச்சரவை கூட்டத்தில், வாக்குறுதித் திட்டங்களை செயல்படுத்தினோம். 'கிரஹ லட்சுமி' திட்டம், பெண்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது.
பா.ஜ.,வினர் ஒவ்வொரு தேர்தலிலும், ஒவ்வொரு வாக்குறுதி அளிப்பர். ஆனால் அதை நிறைவேற்றுவது இல்லை. பிரதமர் நரேந்திர மோடியின் இமேஜ் குறைகிறது. எனவே பா.ஜ., ஆட்சியில் உள்ள மாநிலங்களில், இலவச திட்டங்களை அறிவிக்கின்றனர்.
இந்தியாவில் சொன்னதை சொன்னபடி செய்தது, சித்தராமையா அரசு தான். இதற்கு முன் குஜராத், முன்மாதிரி மாநிலமாக இருந்தது. இப்போது கர்நாடக அரசின் வாக்குறுதித் திட்டங்கள், முன் மாதிரியாக உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.