தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ துப்பாக்கி சூட்டில் 4 பேர் இறந்தபோது குமாரசாமி ராஜினாமா செய்யாதது ஏன்?

துப்பாக்கி சூட்டில் 4 பேர் இறந்தபோது குமாரசாமி ராஜினாமா செய்யாதது ஏன்?

துப்பாக்கி சூட்டில் 4 பேர் இறந்தபோது குமாரசாமி ராஜினாமா செய்யாதது ஏன்?


ADDED : ஜூன் 07, 2025 11:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2025 11:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: “குமாரசாமி முதல்வராக இருந்தபோது நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் பலியானதால் அவர் ராஜினாமா செய்தாரா?” என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பேலுார் கோபாலகிருஷ்ணா எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் குமாரசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

பெங்களூரில் நேற்று காங்கிரஸ் எம்.எல்.ஏ., பேலுார் கோபாலகிருஷ்ணா அளித்த பேட்டி:

பெங்களூரில் கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் பலியான சம்பவம் தற்செயலானது; மிகவும் வருத்தம் அளிக்கிறது. இதற்கு முன்பு இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததில்லையா? ஹாவேரியில் விவசாயிகள் இறந்தபோது, எடியூரப்பா ராஜினாமா செய்தாரா? தற்செயலாக நடந்த சம்பவங்களை, அரசியலாக்கக்கூடாது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு, அரசு, 50 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். வெற்றியை கொண்டாடியது தவறா?

முதல்வர் சித்தராமையாவை ராஜினாமா செய்யுமாறு கோருவதற்கு, குமாரசாமி வெட்கப்பட வேண்டும். கன்னட நடிகர் ராஜ்குமார் மறைவின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர். அப்போது முதல்வராக இருந்த அவர் ஏன் ராஜினாமா செய்யவில்லை?

இவ்வாறு அவர் கூறினார்.

அறிவிப்பு


இதற்கு பதிலளித்து மத்திய அமைச்சர் குமாரசாமி அளித்த பேட்டி:

நடிகர் ராஜ்குமார் இறந்தபோது, அவரது குடும்பத்தினர், அரசிடம் தெரிவிக்கவில்லை. மருத்துவமனையில் இருந்தபடியே இவ்விஷயத்தை அறிவித்தனர்.

பெரிய மனிதர்கள் இறக்கும்போது, அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, அதன் பின் தான், விஷயத்தை வெளியிடுவது வழக்கம். முறையான ஏற்பாடுகள் செய்வதற்கு முன்னரே, மக்கள் பெருமளவில் கூடிவிட்டனர்.

ஆனாலும், எந்த சலசலப்பும் ஏற்படவில்லை. ஆனாலும் சிலர், எங்கள் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக, டெம்போக்களில் குண்டர்களை வரவழைத்தனர். கற்களை வீசி, மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்தனர்.

நான் முதல்வராக இருந்தபோது, அம்பரிஷ் மறைவின்போதும்; பா.ஜ., ஆட்சியில் இருந்தபோது புனித் ராஜ்குமார் மறைவின்போது கலவரம் நடந்ததா?

இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us