/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சுகாஸ் ஷெட்டி வீட்டிற்கு செல்லாதது ஏன்? உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் விளக்கம்
/
சுகாஸ் ஷெட்டி வீட்டிற்கு செல்லாதது ஏன்? உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் விளக்கம்
சுகாஸ் ஷெட்டி வீட்டிற்கு செல்லாதது ஏன்? உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் விளக்கம்
சுகாஸ் ஷெட்டி வீட்டிற்கு செல்லாதது ஏன்? உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் விளக்கம்
ADDED : மே 04, 2025 11:15 PM

பெங்களூரு: கொலை செய்யப்பட்ட பஜ்ரங் தள் தொண்டர் சுகாஸ் ஷெட்டி வீட்டிற்கு செல்லாதது ஏன் என்பதற்கு, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் விளக்கம் அளித்து உள்ளார்.
மங்களூரு பஜ்பே கின்னிபதவு பகுதியில் கடந்த 1ம் தேதி இரவு, பஜ்ரங் தள் தொண்டர் சுகாஸ் ஷெட்டி கொலை செய்யப்பட்டார்.
அரசு சார்பில் தங்களுக்கு யாரும் ஆறுதல் சொல்லவில்லை என்று, சுகாஸ் பெற்றோர் வருத்தம் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் மங்களூரு சென்றார். சுகாஸ் வீட்டிற்கு செல்லலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் செல்லவில்லை.
இதுகுறித்து பெங்களூரில் நேற்று பரமேஸ்வர் அளித்த பேட்டி:
கொலையான சுகாஸ் ஷெட்டி மீது கொலை உட்பட 5 வழக்குகள் உள்ளன. உள்துறை அமைச்சராக இருக்கும் நான், சுகாஸ் வீட்டிற்கு செல்வது சரியாக இருக்காது. சுகாஸ் கொலை வழக்கில் அவரது குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்க அரசு உதவி செய்யும்.
கொலை வழக்கில் சம்பந்தப்படாதவர்களை கொலையாளிகள் என்று அழைக்க முடியுமா.
அவர்களை கைது செய்யவும் முடியுமா. இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் எட்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். நான் மங்களூரு சென்ற போது முஸ்லிம் சமூக தலைவர்கள் என்னை சந்தித்தது உண்மை தான். யாராவது சந்திக்க வரும் போது வராதீர்கள் என்று சொல்ல முடியுமா? மற்ற சமூகத்தினரும் என்னை சந்திக்க வந்து இருக்கலாம். ஆனால் யாருமே வரவில்லை.
சுகாஸ் கொலை வழக்கை என்.ஐ.ஏ., விசாரணைக்கு கொடுக்க வேண்டியது இல்லை. நமது போலீஸ் அதிகாரிகள் மீது நம்பிக்கை உள்ளது. விசாரணை சரியான பாதையில் நடக்கிறது.
பா.ஜ., ஆட்சியிலும் ஹிந்து அமைப்பினர் கொலை நடந்து உள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும்படி எஸ்.பி.,க்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஒருவரை கொலை செய்ய திட்டமிடுவது பற்றி முன்கூட்டியே தகவல் கிடைத்தால், கொலையை தடுக்கவும் போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.