/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மழை பாதிப்பு பகுதிகளில் முதல்வர் ஆய்வு செய்யாதது ஏன்?
/
மழை பாதிப்பு பகுதிகளில் முதல்வர் ஆய்வு செய்யாதது ஏன்?
மழை பாதிப்பு பகுதிகளில் முதல்வர் ஆய்வு செய்யாதது ஏன்?
மழை பாதிப்பு பகுதிகளில் முதல்வர் ஆய்வு செய்யாதது ஏன்?
ADDED : மே 20, 2025 12:14 AM
பெங்களூரு: பெங்களூரில் மழை பாதிப்பு பகுதிகளை முதல்வர் சித்தராமையா நாளை ஆய்வு செய்கிறார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பெங்களூரில் மழை பாதித்த பகுதிகளை இன்று (நேற்று) ஆய்வு செய்ய இருந்தேன். மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் இருக்கும். பாதுகாப்பு என்ற பெயரில் மக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும். இதனால் 21 ம் தேதி ஆய்வு செய்ய உள்ளேன்.
நகரில் சாக்கடை கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. 210 இடங்கள் தாழ்வான பகுதிகள் என்று கண்டறிந்து 166 இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பிரச்னை தீர்க்கப்பட்டது. காம்பவுன்ட் சுவர் இடிந்து இறந்த சசிகலா என்ற பெண் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
துணை முதல்வர் சிவகுமார் அளித்த பேட்டி:
பெங்களூரு நகர அமைச்சராக பொறுப்பு ஏற்ற பின் மழைநீர் பிரச்னைகளை எதிர்கொள்ளும் 210 இடங்கள் அடையாளம் காணப்பட்டன. இதில் 166 இடங்களில் பிரச்னை தீர்க்கப்பட்டு உள்ளது. மழை இயற்கையின் விதி. நாம் ஒன்றும் செய்ய முடியாது.
சில்க் போர்டு பகுதியில் நிறைய மழை பெய்து உள்ளது. ரயில்வே சுரங்கபாதையில் தண்ணீர் தேங்குவது குறித்து ரயில்வே துறையுடன் ஆலோசிப்போம். விமர்சனம் பற்றி கவலை இல்லை. மான்யதா டெக் பார்க் பகுதியில் சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றுவதில் சிலர் நீதிமன்றத்தில் தடை பெற்று உள்ளனர். இதனால் சிக்கல் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இருவர் பலி
பெங்களூரு பி.டி.எம்., லே - அவுட் 2 வது ஸ்டேஜ் பகுதியில் பெய்த கனமழையால் அங்கு உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளம் மூழ்கியது. தண்ணீரை அகற்றுவதற்கு காவலாளி மனோகர், 55 நேற்று இரவு மின்மோட்டாரை ஆன் செய்தார். அப்போது அவரையும், பக்கத்தில் நின்ற தினேஷ், 9 என்ற சிறுவனையும் மின்சாரம் தாக்கியது. இருவரும் உயிரிழந்தனர்.