/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜாதிவாரி கணக்கெடுப்பு ஏன்? முதல்வர் மகன் யதீந்திரா விளக்கம்!
/
ஜாதிவாரி கணக்கெடுப்பு ஏன்? முதல்வர் மகன் யதீந்திரா விளக்கம்!
ஜாதிவாரி கணக்கெடுப்பு ஏன்? முதல்வர் மகன் யதீந்திரா விளக்கம்!
ஜாதிவாரி கணக்கெடுப்பு ஏன்? முதல்வர் மகன் யதீந்திரா விளக்கம்!
ADDED : ஏப் 23, 2025 05:42 AM

மைசூரு : ''பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக, ஜாதிவாரி கணக்கெடுப்பை முதல்வர் சித்தராமையா அமல்படுத்தவில்லை,'' என, காங்கிரஸ் எம்.எல்.சி.,யும், முதல்வரின் மகனுமான யதீந்திரா தெரிவித்தார்.
மைசூரில் அவர் அளித்த பேட்டி:
ஜாதிவாரி கணக்கெடுப்பு என்று அழைக்கப்படும் சமூக - பொருளாதார - கல்வி கணக்கெடுப்பு செயல்படுத்துவது, ஆதிக்க சமூகங்களின் நலன்களுக்கு எதிரானது என்பதில் உண்மையில்லை.
இந்த அறிக்கை அனைவருக்கும் பயனளிக்கும். இந்த அறிக்கையில் ஜாதிகளின் மக்கள்தொகை, பொருளாதாரம், சமூகம், வேலை வாய்ப்பு நிலை பற்றிய விபரங்கள் உள்ளன. அதன் அடிப்படையில், ஒவ்வொரு சமூகத்திற்கும் இடஒதுக்கீட்டின் அளவை அரசு தீர்மானிக்கிறது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டின் வரம்பை அதிகரிக்க மத்திய அரசை, மாநில அரசு வலியுறுத்தும். இது ஒக்கலிகர், லிங்காயத் சமூகங்களுக்கும் பயனளிக்கும்.
பா.ஜ., அரசு, '2 ஏ', '2 பி' பிரிவுகளுக்கான இடஒதுக்கீட்டை, 2 சதவீதம் அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் ஜெயபிரகாஷ் ஹெக்டே கமிஷன், அதை மேலும் இரண்டு சதவீதம் அதிகரித்தும்; பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 32 சதவீதத்தில் இருந்து 51 சதவீதமாகவும் அதிகரிக்க பரிந்துரைத்துள்ளது.
பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக, ஜாதிவாரி கணக்கெடுப்பை முதல்வர் சித்தராமையா அமல்படுத்தவில்லை. எங்கள் எம்.எல்.ஏ.,க்களும், கட்சி தலைமையும் முதல்வருக்கு ஆதரவாக நிற்கின்றனர்.
'முடா' வழக்கை அமலாக்கத்துறை விசாரிப்பதற்கும், ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதற்காக சித்தராமையா பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை,
இதை எதிர்த்து அடுத்த நீதிமன்றத்திற்கு செல்வோம். தேவையின்றி எங்களை அமலாக்கத் துறையினர் துன்புறுத்துகின்றனர். சட்டப்படி இதை எதிர்கொள்வோம். இவ்வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்கட்டும். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. பயப்பட வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை.
இவ்வாறு கூறினார்.

