போலீஸ் பாதுகாப்பு எதற்கு? அமைச்சர் பிரியங்க் கேள்வி
போலீஸ் பாதுகாப்பு எதற்கு? அமைச்சர் பிரியங்க் கேள்வி
ADDED : செப் 15, 2026 09:00 PM
பெங்களூரு: 'அமைதியான முறையில் பண்டிகையை கொண்டாடுவதற்கு போலீஸ் பாதுகாப்பு எதற்கு' என, உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்போர் போலீசாரின் உத்தரவுகளை கடைப்பிடிக்க வேண்டும். அமைதியான முறையில் பண்டிகையை கொண்டாடுவதற்கு போலீசார் எதற்கு பாதுகாப்பு தர வேண்டும். ஒரு தரப்பினரின் கொண்டாட்டம், மற்ற தரப்பினருக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது.
எதிர்க்கட்சி தலைவர் அசோக் உள்துறை அமைச்சராக இருந்த போது விநாயகர் ஊர்வலத்தில் என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டதோ, அதுவே தற்போதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
மாநில அரசின் மீது பழி சுமத்த மத்திய அமைச்சர் குமாரசாமியை பா.ஜ., பயன்படுத்துகிறது. மைசூரு டி.நரசிபுரா போலீஸ் இன்ஸ்பெக்டர் தனஞ்செய்யை சஸ்பெண்ட் செய்ய முடியாது. பா.ஜ., சொல்வதை கேட்டு நாங்கள் ஆட்சி நடத்த முடியாது.
டி.நரசிபுரா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.,வினர் குறித்து எஸ்.பி., மல்லிகார்ஜுன் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
