/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'பிரதாப் சிம்ஹாவுக்கு சீட் கொடுக்காதது ஏன்?'
/
'பிரதாப் சிம்ஹாவுக்கு சீட் கொடுக்காதது ஏன்?'
ADDED : ஜூலை 10, 2025 03:57 AM

பெங்களூரு: ''திறமையானவன் என்று கூறிக்கொள்ளும் பிரதாப் சிம்ஹாவுக்கு, கடந்த லோக்சபா தேர்தலின்போது, பிரதமர் மோடி மீண்டும் சீட் தரவில்லை,'' என, மாநில தொழில்நுட்ப துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கேள்வி எழுப்பினார்.
பெங்களூரு விதான் சவுதாவில் அவர் நேற்று அளித்த பேட்டி:
திறமையானவன் என்று கூறிக்கொள்ளும் பிரதாப் சிம்ஹாவுக்கு, கடந்த லோக்சபா தேர்தலின்போது, பிரதமர் மோடி சீட் தரவில்லை. பா.ஜ.,வில் இருப்பவர்கள் சரியாக வேலை செய்திருந்தால், அவர்களுக்கு சீட் கிடைத்திருக்கும். அவருக்கு கிடைக்கவில்லை என்பதற்காக என் மீது குற்றம் சாட்டுகின்றனர்.
நான் கேட்கும் எந்த கேள்விக்கும் அவர் பதிலளிப்பதில்லை. விஷயத்தை திசை திருப்பவே முயற்சிக்கிறார். அவரிடம் ஏதாவது கேட்டால் 'பிரியங்க் பி.யு.சி.,' படித்தவர் என்கிறார். ஆம், நான் பி.யு.சி., தான் படித்துள்ளேன். மோடி என்ன படித்தார்?
'நான் பேசினால், கார்கேயின் பெயரை குறிப்பிடுகிறேன்' என்று பிரதாப் சிம்ஹா கூறுகிறார். என் தந்தை கார்கேயின் பெயரை சொல்வதில் பெருமைப்படுகிறேன். உங்கள் தந்தையின் பெயரை பெருமையாக சொல்ல முடியவில்லை என்றால், நான் என்ன செய்ய முடியும்? உங்கள் தந்தை, அவரின் பணியை சரியாக செய்யவில்லை என்றால் நான் என்ன செய்ய?
'வாக்குறுதித் திட்டங்களால் மக்கள் சோம்பேறிகளாக மாறுகின்றனர்' ரம்பாபுரி சுவாமிகள் கூறியுள்ளார். அவரை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. வாக்குறுதித் திட்டதால், ஏழைகள் பயனடைந்துள்ளனர். வீட்டில் உள்ள பெண்கள், வீட்டின் வறுமைக்காக வெளியே கடன் பெறுவதில்லை. வாக்குறுதித் திட்டம் மூலம், அவர்களுக்கு சுய மரியாதை கிடைக்க செய்துள்ளோம்.
இவ்வாறு கூறினார்.