/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மெட்ரோ நிலையங்களில் 'வைபை' வசதி வருகிறது
/
மெட்ரோ நிலையங்களில் 'வைபை' வசதி வருகிறது
ADDED : ஜூலை 17, 2025 10:59 PM
பெங்களூரு: மஞ்சள், பிங்க் நிற மெட்ரோ ரயில் வழித்தடங்களில் உள்ள ரயில் நிலையங்களில், 'வைபை' வசதி செய்யப்பட உள்ளது.
பெங்களூரு மெட்ரோவில், இயக்கத்திற்கு வர உள்ள மஞ்சள், பிங்க் நிற பாதைகளின் மெட்ரோ நிலையங்களில், 'வைபை' வசதி செய்யப்பட உள்ளது.
இதற்காக, ஏ.சி.இ.எஸ்., எனும் தனியார் நிறுவனத்தோடு பெங்களூரு மெட்ரோ நிறுவனம் 13 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் பயணியர் இணைய சேவைகளை எளிதில் பெற முடியும் என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் மஹேஸ்வர ராவ் கூறுகையில், “4 ஜி, 5 ஜி இணைய சேவையை பயணியர் அனைவரும் பெற முடியும். பயணியர் தடையில்லா இணைய சேவையை பெறுவர். இது பயணியருக்கு சிறந்த அனுபவத்தை தரும்,” என்றார்.