மருத்துவமனை கழிப்பறையில் விதவை பாலியல் பலாத்காரம்
மருத்துவமனை கழிப்பறையில் விதவை பாலியல் பலாத்காரம்
ADDED : மே 07, 2026 12:00 AM
பாகல்கோட்: அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கழிப்பறையில் 34 வயது விதவை, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகல்கோட் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தனது தம்பிக்கு துணையாக, 34 வயதான விதவை, கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையிலே தங்கியிருந்தார்.
இம்மருத்துவமனையில் ஒப்பந்த முறையில் துாய்மை பணியாளராக வேலை பார்க்கும் பரித் சாப் டாங்கே, கடந்த 4ம் தேதி இரவில், விதவையிடம் பேச்சு கொடுத்தார்.
உல்லாசமாக இருக்க அழைத்தார். ஆனால், அப்பெண் மறுப்பு தெரிவித்தார். சம்மதிக்கவில்லை என்றால், ் உனது தம்பியை கொலை செய்து விடுவேன் என மிரட்டினார். அப்பெண்ணை மருத்துவர்கள் கழிப்பறைக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். அப்பெண்ணை கழிப்பறையில் வைத்து பூட்டிவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றார்.
சம்பவம் குறித்து, அப்பெண் தனது உறவினர்களிடம் கூறினார். பாகல்கோட் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதற்கிடையே, பலாத்காரம் செய்த நபர், பெண்ணின் உறவினர்களிடம் சிக்கினார்.
அவருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைக்கப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
