/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட மனைவி, மாமியார் மீது தாக்குதல்
/
கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட மனைவி, மாமியார் மீது தாக்குதல்
கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட மனைவி, மாமியார் மீது தாக்குதல்
கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட மனைவி, மாமியார் மீது தாக்குதல்
ADDED : அக் 25, 2025 05:15 AM
பெலகாவி: கள்ளத்தொடர்பை தட்டிக் கேட்ட மனைவி மற்றும் மாமியாரை, கண் மூடித்தனமாக தாக்கிவிட்டு தலைமறைவான கணவரையும் அவர் குடும்பத்தினரையும் போலீசார் தேடுகின்றனர்.
பெலகாவி மாவட்டம், சிக்கோடி தாலுகாவின் பெம்பலவாடா கிராமத்தில் வசிப்பவர் ராகேஷ் ஹொசமணி, 30. இவருக்கும், ராஜஸ்ரீ, 25, என்பவருக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, திருமணம் நடந்தது.
ராகேஷுக்கு ஏற்கனவே, வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்தது. திருமணத்துக்கு பின்னரும், அது தொடர்ந்தது.
திருமணமான சில நாட்களிலேயே, இந்த விஷயம் ராஜஸ்ரீக்கு தெரிந்தது. கணவருடன் சண்டை போட்டார். 'வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தால், என்னால் குடும்பம் நடத்த முடியாது' என, கூறினார்.
இரண்டு குடும்பத்தின் பெரியவர்கள், சமாதானம் செய்தனர். ஆனாலும் ராகேஷ் திருந்தவில்லை. இதற்கிடையே வரதட்சணை கேட்டு, ராஜஸ்ரீக்கு ராகேஷ் குடும்பத்தினர் தொல்லை கொடுத்தனர். மனம் நொந்த ராஜஸ்ரீ, தன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். தீபாவளி பண்டிகை என்பதால், ராஜஸ்ரீக்கு போன் செய்த கணவர் வீட்டினர், பண்டிகைக்கு வரும்படி அழைத்தனர். கணவர் திருந்தி இருப்பார் என, நம்பி தாயை அழைத்துக் கொண்டு, கணவர் வீட்டுக்கு ராஜஸ்ரீ வந்தார்.
அங்கு சென்றபோது தான், கணவர் திருந்தவில்லை என்பது தெரிந்தது. மனம் வருந்தினார். மாமியாரிடம் கேள்வி கேட்டார். அவர் அலட்சியமாக பேசினார். நேற்று முன் தினம் காலை, இதே விஷயமாக மாமியாருக்கும், மருமகளுக்கும் காரசார வாக்குவாதம் நடந்தது.
அப்போது கணவரும், அவரது சகோதரரும் ராஜஸ்ரீயை கண்மூடித்தனமாக தாக்கினர். மகளை காப்பாற்ற வந்த தாயையும் தாக்கினர். தாய், மகளை வீதியில் இழுத்து வந்து, விரட்டி விரட்டி கையில் கிடைத்த பொருட்களால் தாக்கினர்.
கிராமத்தின் சாலையில் இரண்டு பெண்கள் தாக்கப்படுவதை கண்டும், யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. இதை கண்ட சிலர், காயமடைந்த தாயை, மகளை ஆம்புலன்ஸ் வரவழைத்து, மருத்துவமனைக்கு அனுப்பினர்.
கோகாக் அரசு மருத்துவமனையில், இருவரும் சிகிச்சை பெறுகின்றனர். இந்த சம்பவம் குறித்து, ஊடகங்களில் செய்தி வெளியான பின், சிக்கோடி போலீசார் கிராமத்துக்கு சென்று, விசாரணை நடத்தினர். ராகேஷ் குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
வழக்குப் பதிவானது தெரிந்ததும், அவர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

