/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கள்ளக்காதலியுடன் கணவர் செருப்பால் அடித்த மனைவி
/
கள்ளக்காதலியுடன் கணவர் செருப்பால் அடித்த மனைவி
ADDED : அக் 28, 2025 04:34 AM
பெலகாவி: கள்ளக்காதலியுடன் லாட்ஜில் உல்லாசமாக இருந்த கணவர், மனைவியிடம் கையும், களவுமாக சிக்கி, செருப்படி வாங்கினார்.
பெலகாவி மாவட்டம், சிக்கோடி நகரில் வசிப்பவர் அவினாஷ் போஸ்லே, 40. இவருக்கு மனைவி இருந்தும், வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். அவ்வப்போது, மனைவிக்கு தெரியாமல், ரகசியமாக கள்ளக்காதலியை சந்திப்பார். சமீபத்தில் இவ்விஷயம், மனைவிக்கு தெரியவந்தது. கணவருடன் சண்டை போட்டார். ஆனால் அவினாஷ் போஸ்லே, அதை பொருட்படுத்தவில்லை.
இதற்கிடையில் நேற்று மதியம், இவர் தன் கள்ளக்காதலியை அழைத்துக் கொண்டு, சிக்கோடி பஸ் நிலையம் அருகில் உள்ள லாட்ஜுக்கு சென்றிருந்தார். இதையறிந்த மனைவி, கோபத்துடன் லாட்ஜுக்கு வந்தார். கணவரும், கள்ளக்காதலியும் தங்கியிருந்த அறைக்கு சென்றார்.
கணவரின் சட்டையை பிடித்து, சாலைக்கு இழுத்து வந்தார். தன் காலில் இருந்த செருப்பை கழற்றி, கணவரையும், அவரது கள்ளக்காதலியையும் சரமாரியாக அடித்து துவைத்தார். இதை சிலர் தங்களின் மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இது வேகமாக பரவி வருகிறது. சம்பவத்தை வேடிக்கை பார்த்த பெண்கள் பலரும், 'மனைவிக்கு துரோகம் செய்துவிட்டு, கள்ளக்காதலியுடன் ஆட்டம் போடும் கணவரை இப்படித்தான் தண்டிக்க வேண்டும்' என, பேசிக்கொண்டனர்.

