/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கணவரை கொன்ற குற்றவாளி காட்டி கொடுத்த மனைவி
/
கணவரை கொன்ற குற்றவாளி காட்டி கொடுத்த மனைவி
ADDED : ஜூன் 13, 2025 07:00 AM
பெங்களூரு: பெங்களூரு வர்த்துார் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கட்டுமானம் நடந்த கட்டடத்தின் அருகில் உள்ள சாக்கடை கால்வாயில், மே 1ம் தேதி அடையாளம் தெரியாத நபரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசாரின் விசாரணையில், இறந்தவர் நேபாளம் நாட்டை சேர்ந்த தீபக் பகதுார் பட் என்பது தெரிய வந்தது. இவ்விஷயம், அவரது மனைவி சுஷ்மா குருங்கிற்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார், இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவக்கினர்.
இதற்கிடையில், சுஷ்மாவை அவரது உறவினர் கருண் சிங் தொடர்பு கொண்டு, 'தீபக் பகதுாரை விகாஸ் பகதுார் பிஸ்வா, 24, கொன்றதாக தெரிவித்தார். இதுதொடர்பாக, ஜூன் 5ல் வர்த்துார் போலீசில், சுஷ்மா புகார் அளித்தார். அதன் பின் வழக்குப்பதிவு செய்த போலீசார், விகஸ் பகதுார் பிஸ்வாவை கைது செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறியதாவது:
ஒரு மாதத்துக்கு முன்பு தான், விகாஸ் பகதுார், பெங்களூரு வந்தார். இங்கு ஹோட்டல் ஒன்றில் சமையல்காரராக பணியாற்றி வந்தார். தீபக் பகதுார் பட்டும், அவரது மனைவியும் வசித்து வரும் அதே வீட்டில், விகாஸ் பகதுார் பிஸ்வாவும் தங்கினார். ஏப்., 11ம் தேதி மது போதையில் இருந்த தீபக் பகதுாருக்கும், அவரது மனைவி சுஷ்மாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அங்கிருந்த விகாஸ், இருவரையும் சமாதானப்படுத்த முயற்சித்தார். அப்போது கோபமடைந்த தீபக், விகாசை தாக்கினார். இதில், விகாசின் கண்ணில் காயம் ஏற்பட்டது.
இச்சம்பவத்துக்கு பழிவாங்க சரியான நேரத்துக்கு காத்திருந்த விகாஸ், சம்பவத்தன்று தீபக்கை கொன்று, சாக்கடை கால்வாயில் வீசி யது தெரியவந்தது.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.