'கெய்சர்' கசிவால் கணவர் உயிரிழப்பு அதிர்ச்சியில் மனைவி தற்கொலை
'கெய்சர்' கசிவால் கணவர் உயிரிழப்பு அதிர்ச்சியில் மனைவி தற்கொலை
ADDED : பிப் 09, 2026 05:07 AM

நெலமங்களா: குளியல் அறையில் கெய்சர் கசிவால், மூச்சுத்திணறி கணவர் இறந்த தகவலை கேட்ட அதிர்ச்சியில், மனைவியும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
துமகூரு மாவட்டம் குனிகல்லை சேர்ந்தவர் ராஜு, 48. இவரது மனைவி மீனா, 42. இவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 18 வயதில் மகன் உள்ளார். ஐந்து ஆண்டுகளாக, பெங்களூரு ரூரல் நெலமங்களா அருகே ஜக்கசந்திரா கிராமத்தில் வசித்தனர். ராஜு தனியார் நிறுவனத்திலும், அவரது மனைவி வங்கியிலும் ஊழியராக வேலை செய்தனர்.
நேற்று முன்தினம் வீட்டின் குளியலறையில், ராஜு குளித்து கொண்டு இருந்தார். கெய்சரில் இருந்து வெளியேறிய காஸ் கசிவை சுவாசித்து, மூச்சுத்திணறி அவர் இறந்தார். வெளியே சென்றிருந்த மீனாவுக்கு, கணவர் இறந்த தகவல் கிடைத்தது.
அதிர்ச்சி அடைந்து வீட்டிற்கு வந்த அவர், கணவரின் முகத்தை கூட பார்க்காமல், பக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்திற்கு சென்று, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடல் அருகே கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில், 'என் கணவர் இல்லாமல் என்னால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது' என, எழுதி உள்ளார்.
