தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/துப்பாக்கிமுனையில் மிரட்டல் கணவர் மீது மனைவி புகார்

துப்பாக்கிமுனையில் மிரட்டல் கணவர் மீது மனைவி புகார்

துப்பாக்கிமுனையில் மிரட்டல் கணவர் மீது மனைவி புகார்


UPDATED : நவ 13, 2026 12:00 AM

ADDED : நவ 12, 2026 07:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 12:00 AM ADDED : நவ 12, 2026 07:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சுத்தகுண்டேபாளையா: விவாகரத்து கேட்டு தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டுவதாக, கணவர் மீது மனைவி போலீசில் புகார் செய்துள்ளார்.

பெங்களூரின் சுத்தகுண்டேபாளையா பிஸ்மில்லா நகரில் வசிப்பவர் முஹீஸ் அகமது, 35. இவரது மனைவி ஜாரா அமீனா, 32. இவர்களுக்கு 2017ல் திருமணம் நடந்தது. மகன், மகள் உள்ளனர்.

கடந்த ஆண்டு முஹீசுக்கு இன்னொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அவரை திருமணம் செய்து கொள்ள நினைத்தார். இதனால் விவாகரத்து வழங்கும்படி மனைவிக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தார்.

விவாகரத்து தரவில்லை என்றால் கொன்று விடுவேன் என்று கூறி, துப்பாக்கியை தலையில் வைத்து மிரட்டியுள்ளார்.

இதனால், கடந்த மாதம் கணவர் மீது போலீசில் மனைவி புகார் செய்தார். இருவரையும் அழைத்து போலீசார் பேச்சு நடத்தினர். மனைவிக்கு தொந்தரவு தர மாட்டேன் என்று போலீஸ் முன் கணவர் கூறினார். ஆனாலும் ஜாரா அமீனாவை, கணவரும், அவரது கள்ளக்காதலியும் இணைந்து தாக்கி உள்ளனர்.

இதுபற்றி நேற்று முன்தினம் மீண்டும் போலீசில் அந்த பெண் புகார் செய்தார். முஹீஸ் அகமது மீது வழக்கு பதிவாகியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us