தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/குழந்தை இல்லை என திட்டிய கணவர் கொலை: மனைவி கைது

குழந்தை இல்லை என திட்டிய கணவர் கொலை: மனைவி கைது

குழந்தை இல்லை என திட்டிய கணவர் கொலை: மனைவி கைது


UPDATED : நவ 13, 2026 12:00 AM

ADDED : நவ 12, 2026 07:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 12:00 AM ADDED : நவ 12, 2026 07:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: குழந்தை பிறக்கவில்லை என்பதால், தினமும் கேலி செய்து கொடுமைப்படுத்திய கணவரை, கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார்.

மாண்டியாவைச் சேர்ந்தவர் ராஜசேகர், 44. இவர் சாமராஜ்நகரில் வசிக்கும் மாலாஸ்ரீ, 35, என்பவரை திருமணம் செய்து கொண்டார். பெங்களூரின், கெம்பேகவுடா நகரின், லட்சுமிபுராவில் தம்பதி வசித்தனர். தனியார் வங்கி ஒன்றின் கடன் பிரிவில் ராஜசேகர் பணியாற்றினார். இவரது மனைவி, வீட்டை நிர்வகித்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி பல ஆண்டுகளாகியும், குழந்தை பிறக்கவில்லை. இதற்கு மனைவியே காரணம் என, ராஜசேகர் குற்றஞ்சாட்டி சண்டை போட்டார்.

பகல் நேரத்தில் மனைவியை அன்பாக நடத்திய இவர், இரவில் மது போதையில் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். குழந்தை பிறக்கவில்லை என, கேலி செய்து, மனரீதியாக சித்ரவதை செய்தார். வழக்கம் போல, நேற்று முன்தினம் இரவும் குடிபோதையில் வந்த ராஜசேகர், மனைவியைத் திட்ட துவங்கினார். இதனால் பொறுமை இழந்த மாலாஸ்ரீ, காய்கறி நறுக்கும் கத்தியால், கணவரை குத்தி கொலை செய்தார்.

தகவலறிந்து வந்த கெம்பேகவுடா நகர் போலீசார், ராஜசேகர் உடலை மீட்டனர்; மாலாஸ்ரீயை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us