ADDED : மார் 26, 2025 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சந்திரா லே - அவுட் : தட்சிண கன்னடா மாவட்டம் மூடிகெரே போலீஸ் நிலைய எஸ்.ஐ., கிஷோர். இவருக்கும், பெங்களூரை சேர்ந்த வர்ஷா என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது. 10 லட்சம் ரூபாய் ரொக்கம், 23 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார், 135 கிராம் தங்க நகைகள் வரதட்சணையாக வழங்கப்பட்டன.
தம்பதி இடையே இணக்கம் இல்லாத நிலை நிலவியது. பணியிட மாற்றத்திற்கு 10 லட்சம் ரூபாய் வாங்கி வருமாறு மனைவியை கணவர் துன்புறுத்தி உள்ளார்.
பெற்றோர் வீட்டுக்கு வந்த அவர், சந்திரா லே - அவுட் போலீசில் புகார் செய்தார். சம்பவம் தர்மஸ்தலா போலீஸ் நிலைய பகுதியில் நடந்துள்ளதால், புகார் அந்த போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட உள்ளது.