தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ திருமணமான 2 மாதத்தில் கணவரை கொன்ற மனைவி

 திருமணமான 2 மாதத்தில் கணவரை கொன்ற மனைவி

 திருமணமான 2 மாதத்தில் கணவரை கொன்ற மனைவி


ADDED : மார் 13, 2026 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 06:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

துமகூரு: துமகூரு மாவட்டம் திப்டூரின் சிக்ககொட்டகிஹள்ளி கிராமத்தை சேர்ந்த தெரு வியாபாரி மன்சூர் பாஷா. கடந்த ஜனவரியில், சிக்கமகளூரை சேர்ந்த பர்சானா என்பவருடன் இவருக்கு திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பின், இருவரும் திப்டூர் டவுனில் வசித்து வந்தனர். கடந்த, 4ம் தேதி வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க வெளியே சென்ற மன்சூர் பாஷா வீடு திரும்பவில்லை. கவலை அடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். கடைசியாக, சிக்ககொட்டகிஹள்ளி கிராமத்தில் உள்ள தோட்டம் ஒன்றில், மன்சூர் பாஷாவின் சடலம் கிடந்தது.

திப்டூர் ரூரல் போலீசார் விசாரித்து வந்தனர்.

சில தொழில்நுட்ப தகவல்களின் அடிப்படையில், சிக்கமகளூரை சேர்ந்த தன்ராஜ், 24, வெங்கடேஷ், 24, தர்ஷன், 24, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்த போது, தன்ராஜுக்கும், மன்சூர் பாஷாவின் மனைவி பர்சானாவுக்கும் திருமணத்துக்கு ஏழு மாதத்துக்கு முன்னரே அறிமுகம் கிடைத்தது. இது நட்பாக மாறி காத லானது. இருவரும் சேர்ந்து சிக்கமகளூரின் பல இடங்களுக்கு சென்றுள்ளனர்.

திப்டூர் ரயில் நிலையம் அருகே இருவரும் ஒன்றாக சுற்றுவதை, இருவரின் குடும்பத்தினரும் பார்த்துள்ளனர். அதனால் பர்சானாவை, மன்சூர் பாஷாவுக்கு அவசரமாக திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்துக்கு பின்னரும், பர்சானா, தன்ராஜ் இடையேயான உறவு முறியவில்லை.

இருவரும் சேர்ந்து வாழ முடிவெடுத்தனர். அதற்கு தடையாக உள்ள மன்சூர் பாஷாவை தீர்த்து கட்ட திட்டமிட்டனர். அதன்படி, கடந்த 4ம் தேதி கைதான தர்ஷன், மன்சூர் பாஷாவை தொடர்பு கொண்டு, இரும்பு சாமான் கொண்டு வந்துள்ளதாகவும், அதை எடைக்கு போட வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

இதையடுத்து, சிக்ககொட்டகி ஹள்ளி கிராமத்துக்கு சென்ற மன்சூர் பாஷாவை, கொலை செய்ததா க தெரிவித்தனர். பர்சானாவும் கைது செய்யப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us