தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கணவர் வீட்டில் திருட்டு மனைவி, காதலர் கைது

 கணவர் வீட்டில் திருட்டு மனைவி, காதலர் கைது

 கணவர் வீட்டில் திருட்டு மனைவி, காதலர் கைது


ADDED : மே 09, 2026 11:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2026 11:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெலகாவி: கணவரின் வீட்டில் இருந்து, 21 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடி ஓடிய மனைவியும், அவரது காதலரும் கைது செய்யப்பட்டனர்.

பெலகாவி மாவட்டம், ராமதுர்கா தாலுகாவின் ஹொஸ்கோட்டே கிராமத்தில் வசிப்பவர் ஷரீப், 27. இவருக்கும், மூடலகி தாலுகாவின், ஹசீனா, 22, என்பவருக்கும், இரண்டு மாதங்களுக்கு முன், திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு முன்பே, ஹனுமந்த மாராபுரா என்பவரை, ஹசீனா காதலித்தார். திருமணத்துக்கு பிறகும், இவர்களின் காதல் தொடர்ந்தது. அவ்வப்போது ரகசியமாக சந்தித்து கொண்டனர்.

வீட்டை விட்டு ஓட, சரியான நேரம் பார்த்திருந்தனர். நான்கு நாட்களுக்கு முன், கணவர் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த, 21 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், 45 கிராம் வெள்ளி பொருட்களை திருடி, காதலருடன் ஹசீனா ஓடிவிட்டார்.

இது குறித்து, ஷரீப் குடும்பத்தினர் கடகோளா போலீஸ் நிலையத்தில், புகார் செய்தனர். விசாரணை நடத்திய போலீசார், ஹசீனாவையும், அவரது காதலரையும் நேற்று முன் தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து போலீசார் கூறியதாவது:

ஹசீனா திருமணத்துக்கு பிறகும், காதலருடன் தொடர்பை விடவில்லை. கணவர் வீட்டிலேயே திருடியுள்ளார். இது வெறும் திருட்டு மட்டுமல்ல. குடும்பத்தினர் தன் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு, ஹசீனா செய்த துரோகம்.

கைதான இருவரையும், நேற்று முன் தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளோம். திருமணத்துக்கு பிறகும், காதலை தொடர்ந்து, அதற்காக தவறான பாதையில் சென்றால், சிறைக்கு செல்ல வேண்டி வரும் என்பதற்கு, ஹசீனாவே உதாரணம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us