ADDED : மார் 27, 2025 05:30 AM
ஹெக்டே நகர்: பெங்களூரில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர், மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த பின், போலீசில் சரணடைந்தார்.
பெங்களூரு ஹெக்டே நகரில் வசித்து வந்தவர் வேல ரமணி, 35. இவரது கணவர் சந்திரசேகர்; டாக்சி ஓட்டுநர். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேல ரமணி பணியாற்றி வந்தார்.
அவர், எப்போது பார்த்தாலும் மொபைல் போனில் பேசிக் கொண்டிருப்பதை, சந்திரசேகர் கவனித்தார். இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் காலையும், குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற பின், இவ்விஷயம் தொடர்பாக தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கோபம் தலைக்கேரிய சந்திரசேகர், மனைவியின் கழுத்தை நெரித்தார். இதில் அவர் இறந்தார். பின், சம்பிகேஹள்ளி போலீஸ் நிலையத்துக்கு சென்று, மனைவியை கொன்றுவிட்டதாக கூறி, சரணடைந்தார். அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.