/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கணவரை கொன்று மருமகன் மீது பழி மனைவி, மகன், கள்ளக்காதலர் கைது
/
கணவரை கொன்று மருமகன் மீது பழி மனைவி, மகன், கள்ளக்காதலர் கைது
கணவரை கொன்று மருமகன் மீது பழி மனைவி, மகன், கள்ளக்காதலர் கைது
கணவரை கொன்று மருமகன் மீது பழி மனைவி, மகன், கள்ளக்காதலர் கைது
ADDED : ஆக 14, 2025 04:03 AM

பெங்களூரு: கணவரை கொலை செய்து, மருமகன் மீது பழி சுமத்திய பெண், அவரது மகன், கள்ளக்காதலர் போலீசாரிடம் சிக்கினர்.
சித்ரதுர்கா நகரின் கெளகோட்டே லே - அவுட்டில் வசித்தவர் ரவிகுமார், 50. இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றினார். ஜூலை 19ம் தேதியில் இருந்து காணாமல் போனார். குடும்பத்தினர், சித்ரதுர்கா ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதற்கிடையே சித்ரதுர்காவின், ஈரஜ்ஜனஹட்டி அருகில், பெட்ஷீட்டில் சுற்றியபடி, அடையாளம் தெரியாத ஒரு ஆணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதை போலீசார் மீட்டு, விசாரணை நடத்திய போது, அது ஆட்டோ ஓட்டுநர் ரவிகுமார் என்பது தெரிந்தது.
ரவிகுமாரின் மனைவி சுனிதாவிடம், விசாரணை நடத்திய போது, 'எங்கள் மகள் ஜெயஸ்ரீ, ஐமங்களாவில் வசிக்கும் மஞ்சுநாத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்.
இதனால் என் கணவருக்கும், மருமகன் மஞ்சுநாத்துக்கும் அவ்வப்போது சண்டை நடந்தது.
'சில மாதங்களுக்கு முன், என் மகள் ஜெயஸ்ரீ, கணவரை பிரிந்து எங்கள் வீட்டுக்கே வந்துவிட்டார். இந்த கோபத்தில், பழி வாங்கும் நோக்கில் என் கணவரை, மருமகன் மஞ்சுநாத் கொலை செய்துள்ளார்' என புகார் அளித்தார்.
போலீசாரும் மஞ்சுநாத்தை அழைத்து விசாரித்ததில், அவருக்கும், கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்பது தெரிந்தது.
தொடர் விசாரணையில் கெளகோட்டேவில், ரவிகுமாரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் திருநங்கை ஒருவரின் வீட்டில் கொலை நடந்து, ஈரஜ்ஜனஹட்டி அருகில் உடலை வீசியது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்பின் திருநங்கை கல்பனாவை விசாரித்த போது, கொலை ரகசியம் வெளிச்சத்துக்கு வந்தது.
பெங்களூரில் வசிப்பவர் கணேஷ், 35. இவர் திருட்டு வழக்குகளில் தொடர்பு கொண்டவர். திருட்டு வழக்கில் தேடப்பட்டதால், பெங்களூரில் இருந்து தப்பி, சித்ரதுர்காவுக்கு வந்து திருநங்கை கல்பனாவின் வீட்டில் அடைக்கலம் பெற்றிருந்தார்.
இவரது பக்கத்து வீட் டில் வசிக்கும் சுனிதாவுடன் அறிமுகம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலானது. இதையறிந்த ரவிகுமார், மனைவியை கண்டித்தார். அப்போதும் அவர் மாறவில்லை.
கணேஷ் பல இடங்களில் திருடியதில், லட்சக்கணக்கான ரூபாயும், பெருமளவில் தங்கநகையும் இருப்பதாக கூறினார். சுனிதாவுக்கும், அவரது மகன் விஷ்ணுவுக்கும் பணத்தாசை காட்டினார். அந்த பணத்தில் தொழில் துவங்கலாம்.
புதிதாக வீடு கட்டி செட்டில் ஆகலாம் என, கூறி நம்ப வைத்தார். எனவே இதற்கு தடையாக நிற்கும் ரவிகுமாரை தீர்த்து கட்ட திட்டம் தீட்டினர்.
அதன்படி ஜூலை 19ம் தேதி கணேஷ், ரவிகுமாரை திருநங்கையின் வீட்டுக்கு அழைத்து சென்று, அரிவாளால் வெட்டி கொலை செய்தார். ஈரஜ்ஜனஹட்டி அருகில் உடலை வீசிவிட்டு தப்பினர்.
அதன்பின், தாயும், மகனும் நாடகமாடி, மருமகன் மஞ்சுநாத் மீது பழிபோட்டு, போலீசாரை திசை திருப்ப முயற்சித்தனர். கொலையாளிகள் சுனிதா, அவரது மகன் விஷ்ணு, கள்ளக்காதலர் கணேஷ் கைது செய்யப்பட்டனர்.