sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 2வது திருமணத்துக்கு தயாரான கணவர் தாலி கட்டும் நேரத்தில் நிறுத்திய மனைவி

 2வது திருமணத்துக்கு தயாரான கணவர் தாலி கட்டும் நேரத்தில் நிறுத்திய மனைவி

 2வது திருமணத்துக்கு தயாரான கணவர் தாலி கட்டும் நேரத்தில் நிறுத்திய மனைவி


ADDED : டிச 13, 2025 06:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 13, 2025 06:54 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ராய்ச்சூர்: தன்னை காதலித்து, திருமணம் செய்த பின் வேறு ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள தயாரான கணவரின் திருமணத்தை, தாலி கட்டும் நேரத்தில் மனைவி தடுத்து நிறுத்தினார்.

ராய்ச்சூர் நகரை சேர்ந்தவர் ரிஷப், 25. சில ஆண்டுக்கு முன், இவர் பல்லாரியில் கல்லுாரியில் பட்டப்படிப்பு படிக்கும் போது, கொப்பாலை சேர்ந்த 23 வயது பெண் அறிமுகமானார். இது நாளடைவில் காதலாக மாறியது.

இருவரும் சேர்ந்து பல இடங்களில் சுற்றினர். திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து, அந்த பெண்ணுடன் உடல் ரீதியான தொடர்பு வைத்து கொண்டார்.

இதில் இளம்பெண் கர்ப்பமானார். விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என நம்ப வைத்து அவருக்கு பலவந்தமாக கருக்கலைப்பு செய்தார். அதன்பின் காதலியின் நெருக்கடிக்கு பணிந்து, ஒரு கோவிலில் அவருக்கு தாலி கட்டி, திருமணம் செய்து கொண்டார். நாட்கள் செல்ல செல்ல, அவரை விட்டு ரிஷப் விலக துவங்கினார். வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள தயாரானார்.

ராய்ச்சூர் நகரில் உள்ள மண்டபத்தில், நேற்று காலை திருமணம் நடக்கவிருந்தது. உறவினர்கள், நண்பர்கள் கூடியிருந்தனர். கணவருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடக்கும் தகவல் இன்ஸ்டாகிராம் மூலமாக, மனைவிக்கு தெரிய வந்தது.

கோபமடைந்த அவர், கொப்பாலில் இருந்து, ராய்ச்சூருக்கு வந்தார். தாலி கட்டும் நேரத்திற்கு சரியாக மண்டபத்துக்கு வந்தார். அங்கிருந்தவர்களிடம் நடந்ததை கூறினார். நடக்கவிருந்த கணவரின் திருமணத்தை தடுத்து நிறுத்தினார். இரு வீட்டாரும் மண்டபத்தில் இருந்து வெளியேறினர்.

தன்னை காதலித்து, திருமணம் செய்துகொண்டு, நம்பிக்கை துரோகம் செய்ததாக கூறி, ராய்ச்சூர் மகளிர் போலீஸ் நிலையத்தில், மனைவி புகார் அளித்துள்ளார். போலீசார், ரிஷப்பிடம் விசாரணையை துவக்கி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us