sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

கணவன் கொலைக்கு பழிவாங்க மனைவி சபதத்தால் மூன்று கொலை

/

கணவன் கொலைக்கு பழிவாங்க மனைவி சபதத்தால் மூன்று கொலை

கணவன் கொலைக்கு பழிவாங்க மனைவி சபதத்தால் மூன்று கொலை

கணவன் கொலைக்கு பழிவாங்க மனைவி சபதத்தால் மூன்று கொலை


ADDED : ஜூன் 27, 2025 11:13 PM

Google News

ADDED : ஜூன் 27, 2025 11:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: மூன்று பேர் கொலை செய்யப்பட்டதற்கு, கணவரின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்க மனைவி செய்த சபதமே காரணம் என்பது, போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

கலபுரகி புறநகரின் பட்னா கிராமத்தில் வசிக்கும் சித்தரூடா, 35, தாபா நடத்துகிறார். இந்த தாபாவில் ஜெகதீஷ், 28, மேனேஜராகவும், ராமசந்திரா, 48, சமையல் ஊழியராகவும் பணியாற்றினர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, இவர்கள் தாபாவில் இருந்தபோது, மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டனர்.

மூவர் கொலை தொடர்பாக விசாரணை நடத்திய சபர்மன் போலீசார், பாக்யஸ்ரீ, 30, நாகராஜ், 23, ஈரண்ணா, 27, பீரண்ணா, 21, நாகராஜ், 17, பீரேஷ், 35, சாகர், 24, ராச்சன்னா, 22, சந்திரகாந்த், 30, ஆகியோரை கைது செய்தனர்.

கடந்த 2024 நவம்பர் 12ம் தேதியன்று, ரவுடி சோமு ராத்தோட், இந்த தாபாவுக்கு வந்தார். இரண்டு பீர் பாட்டில்களை வாங்கினார்.

இதற்கு பணம் செலுத்தும் விஷயத்தில், தாபா உரிமையாளர் சித்தரூடாவுடன் சோமு தகராறு செய்தார்.

அப்போது சித்தரூடாவும், ஜெகதீஷும், மற்றவர்களும் சோமு ராத்தோடை தாக்கினர். இதில் அவர் உயிரிழந்தார். உடலை கலபுரகி புறநகரில் வீசினர். சித்தரூடா உட்பட, சிலர் கைதாகி சிறையில் இருந்தனர்.

இதற்கிடையே ரவுடியின் மனைவி பாக்யஸ்ரீ, தன் கணவரின் உடல் முன்பாக நின்று, அவரை கொலை செய்தவர்களை பழிக்கு பழி வாங்கும் வரை, மாங்கல்யத்தை எடுப்பதில்லை என, சபதம் செய்தார்.

பழிவாங்கும்படி தன் குடும்பத்தினருக்கு நெருக்கடி கொடுத்தார். அவர்களும் சித்தரூடாவும், மற்றவர்களும் ஜாமினில் வெளியே வருவதற்காக காத்திருந்தனர்.

அவர்கள் ஜாமினில் வெளியே வந்த நாளில் இருந்தே, கொலைக்கு திட்டம் தீட்டி வந்தனர். பாக்யஸ்ரீயின் சபதத்தை நிறைவேற்ற கொலை செய்யும்படி நெருக்கடி கொடுத்ததால் கொலை செய்ததாக, விசாரணையில் ஒன்பது பேரும் ஒப்புக்கொண்டனர்.

கைதான ஈரண்ணா, சோமுவின் சகோதரர். மற்றவர்களும் பாக்யஸ்ரீயின் குடும்பத்தினரே என்பது, விசாரணையில் தெரிந்தது.






      Dinamalar
      Follow us