/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' பெயரில் 'வைபை' ஐ.டி.,
/
'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' பெயரில் 'வைபை' ஐ.டி.,
ADDED : அக் 30, 2025 04:44 AM

ஜிகனி: 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்ற பெயரில் 'வைபை' ஐ.டி., இருப்பது பற்றி, ஜிகனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
பெங்களூரு ரூரல் ஆனேக்கல் தாலுகா, ஜிகனி கல்லுபாலு கிராமத்தில் வசிப்போர், இணையதள சேவைக்காக மொபைல் போனில் 'வைபை' ஆன் செய்யும்போது, 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்ற பெயரில், ஒரு ஐ.டி., வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அறிந்த, பஜ்ரங் தள் அமைப்பினர், ஜிகனி போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர்.
'ஜிகனியில் பாகிஸ்தானை சேர்ந்த யாரோ ஒருவர் வசிக்கிறார். அவர் தான், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற பெயரில், வைபை ஐ.டி., வைத்துள்ளார். அந்த நபரை கண்டுபிடிக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தனர்.
புகாரின்படி, ஜிகனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கினர். கடந்த ஆண்டு ஜிகனி, பீன்யாவில் சட்டவிரோதமாக வசித்த, பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

