/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கரும்பு லாரிகளை வழிமறித்த காட்டு யானைகள் அட்டகாசம்
/
கரும்பு லாரிகளை வழிமறித்த காட்டு யானைகள் அட்டகாசம்
கரும்பு லாரிகளை வழிமறித்த காட்டு யானைகள் அட்டகாசம்
கரும்பு லாரிகளை வழிமறித்த காட்டு யானைகள் அட்டகாசம்
ADDED : செப் 25, 2025 11:08 PM

சாம்ராஜ்நகர்: வனப்பகுதி சாலையில் காய்கறி லாரிகளை, காட்டு யானைகள் மடக்கி பிடித்து, காய்கறிகளை தின்கின்றன. அதே போன்று கரும்பு கொண்டு செல்லும் லாரிகளையும், யானைகள் விடுவது இல்லை.
சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகாவின் பண்டிப்பூர் வனப்பகுதி சாலையில் காய்கறிகள், கரும்புகள் கொண்டு செல்லும் லாரி ஓட்டுநர்களுக்கு காட்டு யானைகள் அச்சுறுத்தலாக உள்ளன. ஏனெனில் இத்தகைய லாரிகளை மடக்கி கரும்புகள், காய்கறிகளை யானைகள் தின்கின்றன. லாரிகளின் மேற்கூரையில் தார்பாய் கட்டியிருந்தாலும் விட்டு வைப்பது இல்லை.
சாம்ராஜ் நகரில் இருந்து, சத்தியமங்கலத்தை நோக்கி, நேற்று காலையில் கரும்புகளை ஏற்றிய லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது நான்கைந்து யானைகள், லாரியை வழிமறித்தன. இதனால் அந்த சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, போக்குவரத்து ஸ்தம்பித்தது; வாகன பயணியர் பரிதவித்தனர்.
வயிறு முட்ட கரும்பை தின்ற பின், யானைகள் வனப்பகுதிக்கு சென்றன. அதன்பின் வாகன பயணியர், லாரி ஓட்டுநர்கள் பயணத்தை தொடர்ந்தனர்.