/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'பந்த்'திற்கு சங்கங்கள் ஆதரவு; ஆட்டோ, பஸ்கள் இயங்குமா?
/
'பந்த்'திற்கு சங்கங்கள் ஆதரவு; ஆட்டோ, பஸ்கள் இயங்குமா?
'பந்த்'திற்கு சங்கங்கள் ஆதரவு; ஆட்டோ, பஸ்கள் இயங்குமா?
'பந்த்'திற்கு சங்கங்கள் ஆதரவு; ஆட்டோ, பஸ்கள் இயங்குமா?
ADDED : மார் 20, 2025 12:40 AM
பெங்களூரு: கர்நாடகா பந்திற்கு கே.எஸ்.ஆர்.டி.சி., - பி.எம்.டி.சி., ஆட்டோ, ரிக் ஷா சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் நடத்துநரை மராத்தியர்கள் தாக்கியதை கண்டித்து, கர்நாடகாவில் வரும் 22ம் தேதி கன்னட அமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் சார்பில் பந்த் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பந்த்திற்கு கே.எஸ்.ஆர்.டி.சி., - பி.எம்.டி.சி., ஊழியர்கள் சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன. மேலும், ஓலா, ஊபர், ஆட்டோ சங்கங்களும் ஆதரவு தெரிவித்து உள்ளன. இதனால், வரும் 22ம் தேதி, பஸ், ஆட்டோக்கள், பைக் டாக்சிகள் இயங்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
இதுபோன்று மெட்ரோ ரயில்கள் இயங்குமா என்று அதிகாரிகளிடம் கேட்ட போது, 'இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை' என தெரிவித்தனர்.