/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மைசூரில் இருந்து பா.ஜ.,'மாஜி' எம்.பி., வெளியேற்றமா?
/
மைசூரில் இருந்து பா.ஜ.,'மாஜி' எம்.பி., வெளியேற்றமா?
மைசூரில் இருந்து பா.ஜ.,'மாஜி' எம்.பி., வெளியேற்றமா?
மைசூரில் இருந்து பா.ஜ.,'மாஜி' எம்.பி., வெளியேற்றமா?
ADDED : செப் 14, 2025 04:22 AM

மைசூரு: ''ஆட்சேபனைக்குரிய கருத்து தெரிவிக்கும் பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹாவை, மாவட்டத்தை விட்டு வெளியேற்றுவது தொடர்பாக, போலீசார் மு டிவெடுப்பர்,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
மைசூரில் முதல்வர் சித்தராமையா நேற்று அளித்த பேட்டி:
தசரா துவக்க விழா தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இது நீதிமன்றத்தில் தீர்க்கப்படும். தசரா திருவிழா தேசிய விழாவாகும்; மத நிகழ்ச்சி அல்ல. ஒரு மதத்தினருக்கு மட்டும் உட்பட்டதல்ல. கலாசார ரீதியாக அனைத்து மதத்தினரும் பங்கேற்பர்.
அமைதியை சீர்குலைக்கும் வகையில் பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா பேசினால், அவரை மாவட்டத்தில் இருந்து வெளியேற்றுவது குறித்து போலீசார் முடிவெடுப்பர்.
ஆட்சேபனைக்குரிய வகையில் பேசிய பா.ஜ., தலைவர்கள் ரவி, பசனகவுடா பாட்டீல் எத்னால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். இது அரசியல் அல்ல.
நானும் ஹிந்து தான். என் பெயரில் ஈஸ்வர், ராமர் ஆகிய இரு கடவுளின் பெயரும் உள்ளன.
மாநில அரசு நடத்தும் ஜாதி கணக்கெடுப்பில் புதிய ஜாதிகளை சேர்ப்பதாக பா.ஜ.,வினர் குற்றஞ்சாட்டுகின்றனர். அப்படியானால், மத்திய அரசு நடத்தும் ஜாதி கணக்கெடுப்பு குறித்து, அவர்கள் என்ன சொல்லப்போகின்றனர்?
கட்டாய மதமாற்றத்துக்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம். அதேவேளையில், மதம் மாற வேண்டாம் என்று கூறவும் மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.