/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தர்ஷன் ஜாமின் தொடருமா? நாளை தெரியவரும்
/
தர்ஷன் ஜாமின் தொடருமா? நாளை தெரியவரும்
ADDED : ஜூலை 23, 2025 08:43 AM

சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன் உட்பட ஏழு பேருக்கு வழங்கப்பட்ட ஜாமினை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது, நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.
சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உட்பட ஏழு பேருக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது.
இம்மனு, நீதிபதிகள் பர்திவாலா, மஹாதேவன் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
நடிகர் தர்ஷனுக்கு மூத்த வக்கீல் கபில் சிபில் வாதிட்டு வருகிறார். நேற்று அவருக்கு பதிலாக, ஆஜரான ஜூனியர் வக்கீல், 'மூத்த வக்கீல், வேறு வழக்கு விஷயமாக வாதாட சென்றுள்ளார். எனவே, ஜாமின் மனு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்' என்று கேட்டு கொண்டார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், '24ம் தேதி (நாளை) இம்மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். அன்றைய தினம் வாதங்கள் கேட்கப்படாது. அனைத்து ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்' என்றனர்.
- நமது நிருபர் -