/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடகாவில் 29 முதல் மதுக்கடைகள் மூடல்?
/
கர்நாடகாவில் 29 முதல் மதுக்கடைகள் மூடல்?
ADDED : மே 24, 2025 11:07 PM
பெங்களூரு: 'கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் மாநிலத்தில் உள்ள மதுக்கடைகள், வரும் 29ம் தேதி முதல் காலவரையின்றி மூடப்படும்' என, மது விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில், கடந்த இரண்டு ஆண்டுகளில் நான்கு முறை மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டது. நடப்பாண்டில் மட்டும் இரண்டு முறை உயர்த்தப்பட்டது.
200 சதவீதம்
கடந்த 15ம் தேதி, இந்தியாவில் தயாரிக்கப்படும் மதுபானங்களின் மீதான கலால் வரியை 195 சதவீதத்தில் இருந்து 200 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால், 180 மி.லி., அளவுள்ள குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 முதல் 15 ரூபாயும்; பீர் பாட்டிலுக்கு பத்து ரூபாய் விலை உயர்த்தப்பட்டது.
இதற்கு காரணம், நடப்பாண்டு பட்ஜெட்டில் கலால் துறைக்கு 40,000 கோடி ரூபாய் இலக்காக நிர்ணயிக்கப்பட்டதே. இந்த இலக்கை அடையவே, மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டது.
கடந்த சில மாதங்களாக மதுபானங்களின் விற்பனை குறைந்துள்ளதாக மது விற்பனையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும், புதிதாக பப், மதுபானக்கூடம், ரெஸ்டாரன்ட் ஆகியவற்றிற்கான உரிமம் பெறுவதற்கான ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆலோசனை
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, மது விற்பனையாளர் சங்கம் ஆலோசனை நடத்தியது.
மதுபானங்கள் மீதான கலால் வரியை குறைப்பது, புதிதாக உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை குறைப்பது குறித்து நாளை முதல்வர் சித்தராமையாவுடன் பேச்சு நடத்தப்படும்.
அப்போது சுமுக முடிவு எட்டப்படாவிடில், வரும் 29ம் தேதி முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் காலவரையின்றி மூடப்படும். இந்த முடிவுகளுக்கு மாநிலம் முழுவதும் உள்ள 12,600 மதுக்கடைகளின் உரிமையாளர்களில் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கொட்டும் வருவாய்
கடந்த சில ஆண்டுகளாக மது விற்பனை விபரம்