தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நடப்பாண்டு மைசூரு தசரா 11 நாட்கள் நடக்குமா?

நடப்பாண்டு மைசூரு தசரா 11 நாட்கள் நடக்குமா?

நடப்பாண்டு மைசூரு தசரா 11 நாட்கள் நடக்குமா?


ADDED : ஜூன் 19, 2025 11:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2025 11:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மைசூரு: பிரசித்தி பெற்ற மைசூரு தசரா திருவிழா, ஆண்டுதோறும் 10 நாட்கள் நடப்பது வழக்கம். ஆனால் முதன் முறையாக நடப்பாண்டு 11 நாட்கள் தசரா விழா நடக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

மைசூரின் தசரா திருவிழா, உலக பிரசித்தி பெற்றது. நவராத்திரி நேரத்தில் 10 நாட்கள், வெகு சிறப்பாக கொண்டாடப்படும். ஆனால் நடப்பாண்டு 11 நாட்கள் தசரா விழா கொண்டாடப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இதுகுறித்து, மைசூரின் ஆன்மிக சிந்தனையாளர் செல்வப்பிள்ளை அய்யங்கார் கூறியதாவது:

பொதுவாக ஒவ்வோர் ஆண்டும், 10 நாட்கள் கொண்டாடப்படுவதால் தசரா என்றே அழைக்கப்படுகிறது. தசரா பாரம்பரியம் துவங்கி, 410 ஆண்டுகளை கடந்துள்ளது. இத்தனை ஆண்டுகளாக, 10 நாட்கள் கொண்டாட்டம் நடக்கும். 11 நாட்கள் நடந்த உதாரணங்களே இல்லை.

ஒருவேளை 100 ஆண்டுகளுக்கு முன்பு, 11 நாட்கள் தசரா நடந்திருக்கலாம். ஆனால் என் அனுபவத்தில் பார்த்தது இல்லை. இதுவே முதன் முறையாகும்.

நடப்பாண்டு செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்கள் பஞ்சமி வருகிறது. இரண்டு நாட்களை கணக்கில் எடுத்துக் கொண்டால், 10வது நாள் மஹா நவமி, 11வது நாள் தான் தசமி வரும்.

பூஜை நேரங்களிலும் மாற்றம் இருக்கும். அரச குடும்பத்தினர் சார்பில், அரண்மனையில் நடத்தப்படும் தசரா பூஜைகளிலும் மாற்றங்கள் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எனினும் தசரா கொண்டாட்டங்கள் குறித்து முறைப்படி அரசு அறிவிக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us