தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ டில்லி சென்றார் சிவகுமார் முதல்வர் பதவியை பிடிப்பாரா?

 டில்லி சென்றார் சிவகுமார் முதல்வர் பதவியை பிடிப்பாரா?

 டில்லி சென்றார் சிவகுமார் முதல்வர் பதவியை பிடிப்பாரா?


ADDED : பிப் 11, 2026 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 06:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

முதல்வர் சித்தராமையா நடத்தும், பட்ஜெட் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்து விட்டு டில்லி சென்ற சிவகுமார், முதல்வர் பதவியை பிடிப்பாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முதல்வர் பதவியை தக்க வைக்க சித்தராமையாவும், பதவியை தட்டி பறிக்க சிவகுமாரும் போராடி வருகின்றனர். இவர்களுக்கு இடையே ஏற்பட்டு உள்ள மோதல், நாளுக்கு, நாள் தீவிரம் அடைந்து வருகிறது.

சமீபகாலமாக இருவரும் நேருக்கு நேர் சந்திப்பதையும் தவிர்க்க ஆரம்பித்து உள்ளனர். இந்த பரபரப்புக்கு மத்தியில், டில்லி சென்று மேலிட தலைவர்களை சந்திக்க உள்ளதாக, நேற்று முன்தினம் சிவகுமார் அறிவித்தது, அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

டிக்கெட் ரத்து பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து டில்லி செல்வதற்காக, நேற்று காலை, 9:55 மணிக்கு, சிவகுமாருக்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், அந்த டிக்கெட் திடீரென ரத்து செய்யப்பட்டது. காலை, 10:55 மணிக்கு புறப்படும் விமானத்தில், இரண்டாவது முறையாக டிக்கெட் முன்பதிவு செய்த நிலையில், அந்த டிக்கெட்டையும் ரத்து செய்தனர்.

இதனால், சிவகுமார் டில்லி செல்வாரா, மாட்டாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், மதியம், 12:30 மணிக்கு டில்லி செல்லும் விமானத்தில், டிக்கெட் முன்பதிவு செய்து புறப்பட்டு சென்றார்.

இரண்டு முறை டிக்கெட் எதற்காக ரத்து செய்யப்பட்டது என்பதற்கான காரணமே தெரியவில்லை. முதலில் வர வேண்டாம் என்று கூறிவிட்டு, அதற்கு பின் டில்லி வர மேலிடம் அனுமதி கொடுத்து இருக்கலாம் என்றும், பேச்சு அடிபடுகிறது.

கதவை அடைத்து.. . டில்லி சென்ற பின் சிவகுமார் கூறுகையில், ''அசாம் மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளேன். தேர்தல் தொடர்பாக பிரியங்கா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ளேன். நேரம் ஒதுக்கும் மேலிட தலைவர்களை சந்தித்து பேசுவேன். எனக்கு ஆதரவாக காங்கிரசின், 136 எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர்,'' என்றார்.

முன்னதாக நேற்று காலை பெங்களூரு சதாசிவநகரில் உள்ள வீட்டில் சிவகுமார் அளித்த பேட்டி:

முதல்வர் பதவி மாற்றம் குறித்து பேசாமல், காங்கிரசார் வாயை மூடி கொண்டு இருப்பது நல்லது என்று, மல்லிகார்ஜுன கார்கே முன்னர் கூறினார். நாம் அதை பின்பற்ற வேண்டும்.

ஒவ்வொரு நாளும் எனக்கு நல்ல நாள் தான். விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கும். ஆனாலும், நம் பணியை தொடர வேண்டும்.சித்தராமையாவும், நானும் என்ன பேசினோம் என்பது எங்களுக்கு தெரியும்.

நாங்கள் கதவை அடைத்து விட்டு ரகசியமாக எதுவும் பேசவில்லை. மூத்த தலைவர்கள் முன், ஒன்றாக அமர்ந்து பேசினோம். சித்தராமையா மகன் யதீந்திரா முதல்வர் பதவி குறித்து அடிக்கடி கருத்து தெரிவிக்கிறார். அவருக்கு நோட்டீஸ் வழங்குவது குறித்து, மேலிடத்திடம் கேட்டு முடிவு எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர் பதவிக்காக இரண்டரை ஆண்டுகள் பொறுமையாக இருந்த சிவகுமார், இம்முறை தனக்கு சாதகமான முடிவுடன் டில்லியில் இருந்து திரும்புவார் என்ற பேச்சு அடிபடுகிறது. இதற்கிடையில், கட்சி மேலிடம் அழைத்தால், நானும் டில்லி செல்வேன் என்று, சித்தராமையாவும் கூறி உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us