சித்தராமையா ராஜினாமாவா? இல்லை என்கிறார் சுர்ஜேவாலா!
சித்தராமையா ராஜினாமாவா? இல்லை என்கிறார் சுர்ஜேவாலா!
ADDED : மே 28, 2026 02:16 AM
அ நிறம் | அளவு
பெங்களூரு: சித்தராமையா ராஜினாமா செய்ய இருப்பதாக வெளியான தகவலை, கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா மறுத்து உள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய இருப்பதாக வெளியாகும் தகவல்கள் யூகங்கள் தான். அதை யாரும் நம்ப வேண்டாம். காங்கிரஸ் மேலிடம் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.
எதிர்க்கட்சி தலைவராகவும் பணியாற்றிய சித்தராமையா, இரண்டு முறை முதல்வராக இருந்து உள்ளார். சிவகுமாரும் பல முதல்வர்களுடன் இணைந்து அமைச்சராக பணியாற்றியவர். அவர் சிறந்த நிர்வாகி.
இவ்வாறு அவர் கூறினார்.
