/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அமைச்சரவை மாற்றம் புதிய தலைமை வளருமா?
/
அமைச்சரவை மாற்றம் புதிய தலைமை வளருமா?
ADDED : மே 18, 2025 10:43 PM

பெலகாவி : ''அமைச்சரவை மாற்றப்பட்டால் தான் புதிய தலைமை வளரும்,'' என பொதுப்பணி துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கூறி உள்ளார்.
பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பா.ஜ.,வின் சாதனை குறித்து பேசக்கூடாது என்று யார் கூறினர். மத்தியில் 11 ஆண்டுகள் ஆட்சியில் உள்ள பா.ஜ., அரசு, என்ன சாதனை செய்தது.
கர்நாடக காங்., அரசின் இரண்டு ஆண்டு சாதனை குறித்து பேசுகிறோம். எங்கள் சாதனை குறித்து பேசினால், அவர்களுக்கு என்ன பிரச்னை.
காங்., ஆட்சியில் இறந்த விவசாயிகள் சமாதியில் நினைவஞ்சலி செலுத்துவதாக, பா.ஜ.,வின் அசோக் கூறியுள்ளார். பா.ஜ., ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் நடக்கவில்லையா.
அமைச்சர் பதவி கேட்டு பல எம்.எல்.ஏ.,க்கள் வற்புறுத்தி வருகின்றனர். அமைச்சரவை மாற்றப்பட்டால், அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும். இது பற்றி கட்சி மேலிடம் தான் தீர்மானிக்கும். அமைச்சரவை மாற்றப்பட்டால், புதிய தலைமை வளரும். மாநில கஜானா காலியாகவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.