தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வாக்குறுதிபடி முதல்வர் நடக்கணுமா? 'மாஜி' எம்.பி., சுரேஷ் 'திடீர்' விளக்கம்

 வாக்குறுதிபடி முதல்வர் நடக்கணுமா? 'மாஜி' எம்.பி., சுரேஷ் 'திடீர்' விளக்கம்

 வாக்குறுதிபடி முதல்வர் நடக்கணுமா? 'மாஜி' எம்.பி., சுரேஷ் 'திடீர்' விளக்கம்


ADDED : நவ 30, 2025 04:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 04:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -: ''சித்தராமையா கொடுத்த வாக்குறுதிபடி நடந்து கொள்ள வேண்டும் என, நான் கூறவே இல்லை. நான் கூறிய கருத்தே வேறு,'' என, காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷ் பல்டி அடித்து உள்ளார்.

புதுடில்லியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

மாநில அரசியலில் நடக்கும் குழப்பங்கள் குறித்து, மக்களுக்கு விளக்கம் அளிப்பது, முதல்வர் மற்றும் துணை முதல்வரின் கடமை. கொடுத்த வாக்குறுதிபடி முதல்வர் நடந்து கொள்ள வேண்டும் என, நான் கூறவே இல்லை; நான் கூறிய கருத்தே வேறு.

முதல்வரும், துணை முதல்வரும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிபடி நடக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் கூறினேன், இது பற்றி அவர்கள் விளக்கம் அளித்துள்ளதால், மீண்டும் பேசுவது அர்த்தம் அற்றதாகும்.

முதல்வர், துணை முதல்வர் விளக்கம் அளித்த பின், மற்றவர் பேச்சுக்கு மதிப்பு இல்லை. காங்கிரசில் எந்த கோஷ்டி அரசியலும் இல்லை. ஆரம்பத்தில் இருந்தே சிவகுமார், 'காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அனைவருமே எங்களுடையவர்கள். நான் அவர்களின் தலைவன்' என, கூறியுள்ளார். இப்போதும், எப் போதும் அதையே கூறுவார் .

நான் தனிப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் நோக்கில், நான் டில்லி வந்துள்ளேன். நாளை டில்லியில் இருப்பேன். மேலிட தலைவர்கள் நேரம் ஒதுக்கிக் கொடுத்தால், அவர்களை சந்திப்பேன். அவர்களை சந்தித்த பின், அவர்களுடன் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து, ஊடகத்தினரிடம் விவரிப்பேன்.

அனைத்து குழப்பங்களையும் முதல்வரும், துணை முதல்வரும் தீர்த்துவைக்க முயற்சிக்கின்றனர். அவசியம் ஏற்பட்டால், மேலிடம் தலையிடும். கட்சியை பலப்படுத்துவது உட்பட பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்க, முதல்வரும், துணை முதல்வரும் மேலிட தலைவர்களை சந்திக்கின்றனர். இதில் எந்த விசேஷமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us