sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 பீஹார் தேர்தலில் தே.ஜ., கூட்டணி வெற்றி: மாற்று கட்சியினர் காங்கிரசில் நீடிப்பரா?

/

 பீஹார் தேர்தலில் தே.ஜ., கூட்டணி வெற்றி: மாற்று கட்சியினர் காங்கிரசில் நீடிப்பரா?

 பீஹார் தேர்தலில் தே.ஜ., கூட்டணி வெற்றி: மாற்று கட்சியினர் காங்கிரசில் நீடிப்பரா?

 பீஹார் தேர்தலில் தே.ஜ., கூட்டணி வெற்றி: மாற்று கட்சியினர் காங்கிரசில் நீடிப்பரா?


ADDED : நவ 19, 2025 08:55 AM

Google News

ADDED : நவ 19, 2025 08:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -

பீஹார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் எதிரொலியாக பல்வேறு கட்சிகளில் இருந்து, காங்கிரசுக்கு வந்தவர்கள் இங்கு நீடிப்பரா என்று கேள்வி எழுந்துள்ளது.

தேசிய கட்சி என்று கூறிக் கொள்ளும் காங்கிரஸ் நாளுக்கு, நாள் தேய்பிறையாகி வருகிறது. அதே நேரத்தில் பா.ஜ.,வோ சூரியனை போல பிரகாசித்துக் கொண்டே செல்கிறது. பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு, மவுசு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

மதிப்பு குறைவு அதே நேரத்தில் காங்கிரசுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளின் மதிப்பு, நாளுக்கு, நாள் குறைந்து கொண்டே செல்கிறது. மஹாராஷ்டிரா, ஹரியானா, பீஹார் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று கூறிய, 'இண்டி' கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. சமீபத்தில் நடந்த பீஹார் தேர்தலில், தே.ஜ., கூட்டணி மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களில், அபார வெற்றி பெற்றது.

கர்நாடகாவை பொறுத்தவரையில் பா.ஜ.,வுடன் கூட்டணியில் உள்ள ம.ஜ.த., கட்சியும் இறங்குமுகத்தில் இருந்து, ஏறுமுகத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இப்போது தேர்தல் நடந்தால் கூட, பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அபார வெற்றி பெறும் சூழ்நிலை நிலவுகிறது. 2028 தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.

சிவகுமார் கர்வம் பீஹார் தேர்தலில் தே.ஜ., கூட்டணி அபார வெற்றி பெற்றதை அடுத்து, பிற கட்சிகளில் இருந்து, காங்கிரசுக்கு வந்தவர்கள் இங்கு நீடிப்பரா என்று கேள்வி எழுந்துள்ளது. பா.ஜ.,வில் துணை முதல்வராக இருந்த லட்சுமண் சவதி , சட்டசபை தேர்தலில் அதானி தொகுதியில் போட்டியிட சீட் கிடைக்காததால், காங்கிரசில் இணைந்து வெற்றி பெற்றார். அமைச்சர் பதவி எதிர்பார்த்தார். அது கிடைக்கவில்லை.

பெலகாவி அரசியலை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நினைத்தார். ஜார்கிஹோளி சகோதரர்களை எதிர்த்து அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. தன் அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மீண்டும் அவர் , பா.ஜ., பக்கம் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது.

இதுபோல பா.ஜ.,வில் இருந்து காங்கிரஸ் பக்கம் தாவிய யோகேஸ்வர், தேஜஸ்வினி, நஞ்சுண்டி, கரடி சங்கண்ணா உள்ளிட்ட தலைவர்களின் அரசியல் எதிர்காலமும் கேள்விக்குறியாக உள்ளது.

ம.ஜ.த.,வில் இருந்து காங்கிரசுக்கு சென்ற கவுரிசங்கர், சிவலிங்கே கவுடா உள்ளிட்ட தலைவர்களுக்கும் பெரிய அளவில் காங்கிரசில் மரியாதை இல்லை. 'காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் எங்கள் பக்கம் வருவர்' என, துணை முதல்வர் சிவகுமார் கர்வமாக கூறி வந்தார்.

ஆனால் தங்கள் அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஒருவர் கூட காங்கிரஸ் பக்கம் வரவில்லை . தேர்தலுக்கு முன்பு காங்கிரசில் இணைந்த எதிர்க்கட்சி தலைவர்களும், ஆழம் தெரி யாமல் காலை விட்டு விட்டோமோ என்று யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.

வரும் நாட்களிலோ, தேர்தல் நேரத்திலோ காங்கிரசில் இருந்து நிறைய பேர், பா.ஜ., - ம.ஜ.த., பக்கம் தாவ அதிக வாய்ப்பு உள்ளதாக, அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.






      Dinamalar
      Follow us