/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எஸ்.டி., அமைச்சர்கள் பதவி பறிப்பு காங்., ஓட்டு வங்கியில் பாதிப்பு வருமா
/
எஸ்.டி., அமைச்சர்கள் பதவி பறிப்பு காங்., ஓட்டு வங்கியில் பாதிப்பு வருமா
எஸ்.டி., அமைச்சர்கள் பதவி பறிப்பு காங்., ஓட்டு வங்கியில் பாதிப்பு வருமா
எஸ்.டி., அமைச்சர்கள் பதவி பறிப்பு காங்., ஓட்டு வங்கியில் பாதிப்பு வருமா
ADDED : ஆக 12, 2025 11:26 PM
எஸ்.சி., - எஸ்.டி., சமூக மக்களின் 'பாதுகாவலர் நாங்கள் மட்டும் தான்' என்று, தம்பட்டம் அடித்துக் கொள்வதில், காங்கிரஸ் தலைவர்களுக்கு நிகர், அவர்கள் மட்டுமே. ஆனால் உண்மையை சொல்லப் போனால், எஸ்.சி., - எஸ்.டி., சமூகம் மீது காங்கிரசுக்கு துளி கூட பாசம் இல்லை. அவர்களை ஓட்டு வங்கியாக மட்டுமே பா ர்க்கின்றனர்.
நாங்கள் தான் சமூக போராளி' என்று சொல்லிக் கொள்வதற்காக, அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கேயை நியமித்துள்ளனர். ஆனால் பெயரளவுக்கு தான் அவர் தலைவர். முடிவு எடுக்கும் எல்லா அதிகாரமும் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகிய மூவர் வசமே உள்ளது.
ஜால்ரா காங்கிரஸ் தலைவர் தேர்வு பட்டியலில், மல்லிகார்ஜுன கார்கேயின் பெயர் முதலில் இல்லவே இல்லை. ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் முன்னணியில் இருந்தார். 'அய்யோ சாமி... உங்க சகவாசமே வேண்டாம்யா... ஆள விடுங்க' என, அவர் ஒதுங்கிக் கொண்டார்.
வேறு வழியின்றி தான் கார்கேவை காங்கிரஸ் தலைவர் ஆக்கினர். ஆனால், தலித் ஆன கார்கேவுக்கு உயர் பதவி கொடுத்து, காங்கிரஸ் என்று சிலர் 'ஜால்ரா' அடிக்கின்றனர்.
கர்நாடகாவில் தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ், பா.ஜ., ஆட்சிக் காலத்தில் எஸ்.சி., - எஸ்.டி., சமூக வளர்ச்சிக்கு ஒதுக்கிய 11,000 கோடி ரூபாயை, வாக்குறுதி திட்டங்களுக்கு மடை மாற்றி உள்ளனர்.
எஸ்.டி., மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட, வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் 189 கோடி ரூபாயை, 'ஆட்டை'யை போட்டுள்ளனர்.
இந்த முறைகேட்டில் பலரது கைகள் இருந்ததாலும், மாட்டிக் கொண்டது என்னவோ எஸ்.டி., சமூகத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் நாகேந்திரா தான்.
மற்றவர்கள் எல்லாம் நைசாக தப்பிவிட்டனர். ஆணையத்தில் நடந்த முறைகேட்டால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததுடன், சிறைக்கும் சென்றார் நாகேந்திரா.
தற்போது நாகேந்திராவின் வரிசையில், எஸ்.டி., சமூகத்தின் ராஜண்ணாவும் தன் பதவியை இழந்துள்ளார். நாகேந்திரா ராஜினாமா செய்தார்.
ஆனால் ராஜண்ணா அமைச்சரவையில் இருந்தே நீக்கப்பட்டுள்ளார். ஓட்டுத் திருட்டு குறித்து பேசும் ராகுலை கிண்டல் செய்யும் வகையில் பேசியது தான், அவருக்கு ஆபத்தாக மாறிவிட்டது.
ராகுலை கிண்டல் செய்து பேசினார் என்பதற்காக, ராஜண்ணாவின் பதவி பறிக்கப்பட்டது, காங்கிரசில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் யம்கன்மரடி, சுர்பூர், ராய்ச்சூர் ரூரல், மான்வி, தேவதுர்கா, மஸ்கி, கம்ப்ளி, சிருகுப்பா, பல்லாரி ரூரல், சண்டூர், கூட்லகி, மொளகால்மூரு, செல்லகெரே, ஜகலுார், எச்.டி., கோட்டே, தேவதுர்கா என, 16 எஸ்.டி., தொகுதிகள் உள்ளன.
இதில் 15 தொகுதிகளில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஒரு தொகுதி ம.ஜ.த.,விடம் உள்ளது.
காங்கிரசுக்கு 15 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தாலும் யம்கன்மரடி சதீஷ் ஜார்கிஹோளி, பல் லாரி ரூரல் நாகேந்திரா, பொது தொகுதியான மதுகிரி ராஜண்ணா ஆகிய மூன்று எஸ்.டி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு மட்டுமே அமைச்சர் பதவி கிடைத்தது.
பிரளயம் இதில் இருவர் பதவி இழந்தனர். மீதம் இருப் பது சதீஷ் ஜார்கிஹோளி மட்டும் தான். மனதில் பட்டதை நேரடியாக பேசும், ராஜண்ணாவின் பதவி பறிக்கப்பட்டு இருப்பதால், காங்கிரஸ் மீது எஸ்.டி., சமூக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
'நீங்கள் ஆட்சிக்கு வர எங்க ளது ஓட்டு மட்டும் வேணும், எங்கள் சமூகத்தினருக்கு பதவி வேண்டாமா?' என, ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி வருகின்றன ர்.
எ ஸ்.டி., மக்கள் கோபத்தை தணிக்க காலியாக இருக்கும், இரண்டு அமைச்சர் இடங்களையும், எஸ்.டி., சமூகத்திற்கே காங்கிரஸ் வழங்குமா அல்லது வே று சமூகத்திற்கு செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ஒருவேளை வேறு சமூகத்திற்கு அமைச்சர் பதவி சென்றால், பிரளயம் வெடிக்க கூட வாய்ப்பு உள்ளது. - நமது நிருபர் -