/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பா.ஜ.,- எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சா மீது சபாநாயகர் கருணை காட்டுவாரா?
/
பா.ஜ.,- எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சா மீது சபாநாயகர் கருணை காட்டுவாரா?
பா.ஜ.,- எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சா மீது சபாநாயகர் கருணை காட்டுவாரா?
பா.ஜ.,- எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சா மீது சபாநாயகர் கருணை காட்டுவாரா?
UPDATED : மே 28, 2025 12:20 AM
ADDED : மே 27, 2025 11:51 PM

பெங்களூரு : சட்டசபையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட 18 பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய, சபாநாயகர் காதர், தன்னை மதரீதியாக விமர்சித்த பா.ஜ., --- எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சா மீது கருணை காட்டுவாரா என்று எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் நடந்தது. கூட்டுறவு அமைச்சர் ராஜண்ணா தன்னை 'ஹனி டிராப்' செய்ய முயற்சி நடந்தது பற்றிய உண்மையை, சட்டசபையில் போட்டு உடைத்தார். அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய பா.ஜ., உறுப்பினர்கள், பட்ஜெட் உரையை கிழித்து சபாநாயகர் காதர் மீது வீசினர். சபாநாயகர் பீடத்திற்கும் சென்றனர்.
இதையடுத்து சட்டசபை பா.ஜ., கொறடா தொட்டனகவுடா பாட்டீல் உட்பட 18 பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களை ஆறு மாதம், சஸ்பெண்ட் செய்து காதர் உத்தரவிட்டார். இதுகுறித்து கருத்து தெரிவித்த தட்சிண கன்னடா பெல்தங்கடி பா.ஜ., -- எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சா, சபாநாயகர் காதரை மதரீதியாக விமர்சித்தார்.
இதனால் அவரது எம்.எல்.ஏ., பதவியை பறிக்க கோரி, சட்டசபை ஒழுங்கு குழு கமிட்டியிடம், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் புகார் கொடுத்தனர். அந்த புகார் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சட்டசபையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் தங்கள் தவறை உணர்ந்ததால், சஸ்பெண்ட் திரும்ப பெறப்பட்டதாக காதர் கூறினார். இதுபோன்று தன்னை மதரீதியாக விமர்சித்த ஹரிஷ் பூஞ்சா மீதும், காதர் கருணை காட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
ஏன் என்றால் காதரும் தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்தவர் தான். இதற்கு முன்பு நடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது, ஹரிஷ் பூஞ்சா உள்ளிட்ட தட்சிண கன்னடா மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள் தன்னை கிண்டல் செய்யும் வகையில் பேசினாலும், காதர் கோபப்பட்டது கிடையாது.
தனது மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள் பேச அனுமதி கேட்டால் உடனே கொடுத்தும் விடுவார். இதனால் ஹரிஷ் பூஞ்சா எம்.எல்.ஏ., பதவி விஷயத்திலும் மென்மையான போக்கை கடைப்பிடிப்பாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.